உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாவில் தங்கிய சவுதி இளவரசர்! அப்படி என்ன ஸ்பெஷல்?
பாரீஸ்: பிரான்சு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அங்குள்ள உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், பிரான்சு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் சவுதி பட்டத்து இளவரசர் சந்தித்து பேசினார். தனது இந்த பிரான்சு நாட்டு பயணத்தின் போது, தலைகநகர் பாரீசில் அமைந்துள்ள பிரம்மாண்ட சொகுசு அரண்மனையில் தங்கினார்.

பிரமாண்ட சொகுசு மாளிகை
இதில் என்ன விஷேம் என்றால், உலகின் மிக மதிப்பு கொண்ட பங்களாவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அரச குடும்பத்தினர் தங்கிய வேர்சாய் அரண்மனைக்கு அருகே முகம்மது பின் சல்மானுக்கு சொந்தமான இந்த பிரம்மாண்ட சொகுசு மாளிகை உள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு முகம்மது பின் சல்மான், இந்த பங்களாவை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. மொத்தம் 7 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்காளா 275 மில்லியன் யூரோ (300 மில்லியன் டாலர் மதிப்பு 2015-ல்) கொடுத்து முகம்மது பின் சல்மான் வாங்கினார். ஆனால் யாரிடம் இருந்து இந்த பங்களா வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆடம்பர செலவுகள்
சவுதி பட்டத்து இளவரசர் தங்க இருப்பதால், பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். 12-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சொகுசு மாளிகையை கட்டியது ஜமோல் கசோக்கியின் நெருங்கிய உறவினரான எமத் கசோகி ஆவார். 19 ஆம் நூற்றாண்டு அரண்மனை இடிக்கப்பட்ட பிறகு புதிதாக கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த சொகுசு பங்களா எமோத் கசோகி நிறுவனத்தால் கட்டப்பட்டது. சவுதி அரேபியாவின் சக்தி வாய்ந்த நபராக முகம்மது பின் சல்மான் உருவெடுத்த பிறகு ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

பிரமிப்பூட்டும் வசதிகள்
இந்த சொகுசு அரண்மனைக்கு உள்ளே நைட் கிளப்கள், சினிமா அரங்குகள், நீருக்கடியில் அமைக்கப்பட்ட சொகுசு படுக்கை அறைகள், இருக்கைகள் என பிரம்மிப்பூட்டும் வசதிகள் இந்த பங்களாவில் அமைந்துள்ளது. உலகிலேயே அதிக மதிப்பு மிக்க வீடு இதுதான் என்று பார்ச்சூன் இதழ் கடந்த 2015 ஆம் ஆண்டு தெரிவித்தது. கடந்த 2015- ஆம் ஆண்டு 500 மில்லியன் டாலர் மதிப்பில் சொகுசு படகு ஒன்றை முகம்மது பின் சல்மான் வாங்கியதாக செய்தியும் வெளியாகி இருந்தது. அதேபோல், 2017-ஆம் ஆண்டு லியோனார்டோ டா வின்சி ஓவியத்தை 450 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததால், இதை எதுவும் பட்டத்து இளவரசர் வாங்கவில்லை என்று சவுதி அரேபிய அரசு மறுத்தது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது கடும் கோபம் அடைந்துள்ள மேற்கத்திய நாடுகள், எரிவாயு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கு ரஷியாவை அதிகம் சார்ந்து இருப்பதை தவிர்த்து மாற்று வழிகளை தேடி வருகின்றன. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர்-சவுதி பட்டத்து இளவரசர் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications