பூமி ஒன்றும் சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவுதி மத குரு
ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார்.
தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு விமானத்தில் செல்கிறோம். இது தான் பூமி என்று வைத்துக் கொள்வோம் என அந்த டம்ப்ளரை காண்பித்தார்.

பூமி ஒரு பக்கம் சுற்றுகிறது என்றால் விமானம் வானிலேயே நின்று கொண்டிருந்தால் கூட சீனா விமானத்தை நோக்கி வரும். பூமி மறுபக்கமாக சுற்றுகிறது என்றால் விமானம் சீனாவை அடையவே முடியாது. ஏனென்றால் சீனாவும் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா.
அதனால் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றார் ஷேக். மனிதன் நிலாவுக்கு செல்லவே இல்லை, நிலவுக்கு சென்றதாகக் கூறுவது ஹாலிவுட் ஜோடித்த கதை என்று ஷேக் தெரிவித்துள்ளார்.
ஷேக்கின் கருத்தை விமர்சித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.
Image Credit: Al arabiya
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications