For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் இன்றும், நாளையும் நடக்கும் சீரத்துன்னபி சிறப்பு மாநாடு

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் இன்று துவங்கி இரண்டு நாட்களுக்கு சீரத்துன்னபி (ஸல்) சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அவ்காஃப் மற்றும் மஸ்ஜித் கபீர் ஆதரவில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு மாநாடு துவங்கும். இன்றைய நிகழ்ச்சிகள் கிராண்ட் ஹைபர் அருகில் உள்ள மஸ்ஜித் ஹிலால், அல்-உதைபி, கத்ஆவில் நடைபெறுகிறது.

Seerathunnabi special conference in Kuwait today and tomorrow

நாளைய நிகழ்ச்சிகள் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அபூஹலீபா எதிரே உள்ள மிஸ்க் தமிழ் குத்பா பள்ளியில் நடைபெறுகிறது. இதையடுத்து இஷா தொழுகையைத் தொடர்ந்து நடக்கும் முக்கிய நிகழ்ச்சி குவைத் சிட்டியில் உள்ள மஸ்ஜித் கபூர் உள்ளரங்கில் நடைபெறும்.

நிகழ்ச்சிகளில் அய்யம்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மவ்லவி காரி ஹாபிஸ் எம். ரபீக் அஹமது மிஸ்பாஹி பாகவி எம்.ஏ., துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர்ரஹ்மான் எம்.ஏ. ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இஷா தொழுகையைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.

இந்ந மாநாடு குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 55130271/98011830 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.q8misk.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

English summary
Seerathunnabi special conference will be held in Kuwait today and tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X