பாலிஸ்டிக் ஏவுகணை + ஜெட் விமானங்கள்.. "கிம்மால்" கலக்கத்தில் தென்கொரியா! வாயடைத்து நின்ற அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா தனது 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை தொடர்ச்சியாக ஏவி சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா போர் விமானங்களை கொண்டு அருகில் உள்ள தீவுகளில் குண்டுகளை வீசி பயிற்சி மேற்கொண்டதாகவும், அப்போது தங்கள் நாட்டு எல்லையையொட்டி பறந்ததாகவும் தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், தென்கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே ஏற்கெனவே உரசல் போக்கு இருந்து வரும் நிலையில் அமெரிக்கா தென்கொரியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்கொரியா-அமெரிக்கா நாட்டு ராணுவத்தினர் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ பயிற்சி என்று சொல்வதை விட விமானப்படை பயிற்சி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் F-35 ஸ்டெல்த் ரக 240 போர் விமானங்களை கொண்டு இந்த பயிற்சியை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

நீட்டிப்பு

நீட்டிப்பு

இந்நிலையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டதிலிருந்து வடகொரியா தனது 'பாலிஸ்டிக்' ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அதிக அளவில் ஏவி சோதனை செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது அமெரிக்காவுடனான தனது பயிற்சியை தென்கொரியா மேலும் ஒருநாள் நீடிப்பத்தாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான 'பென்டகனின்' தலைவர் லாயிட் ஆஸ்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த கூட்டு ராணுவ பயிற்சி இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், தற்போது நாளை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் விமானத்தில் பயிற்சி

போர் விமானத்தில் பயிற்சி

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் வடகொரிய தனது போர் விமானங்களை கொண்டும் கொரிய தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் குண்டுகளை வீசி போர் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் தங்களை மேலும் எரிச்சலூட்டியுள்ளதாக தென்கொரிய தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கையின்போது வடகொரியாவின் 140 போர் விமானங்கள் தங்கள் நாட்டின் எல்லையையொட்டி பறந்து சென்றதாகவும், எனவே தாங்கள் அதனை விரட்டி சென்றுள்ளோம் என்றும் தென்கொரிய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கலக்கத்தில் மூன்று நாடுகள்

கலக்கத்தில் மூன்று நாடுகள்

முன்னதாக நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து பார்த்திருக்கிறது. உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலக்கத்தில் இருக்கின்றன. இந்நிலையில் இன்றும் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்திருக்கிறது. இத்துடன் போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை மேற்கொண்டிருப்பது தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் 2000 கி.மீ உயரத்தில் பறந்து 750 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். 2000 கிமீ உயரம் வரை இந்த ஏவுகணை பயணிப்பதால் இது ரேடாரில் சிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+