• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலைவனமாகும் பனி பிரதேசம்.. 20 வருசத்துல இவ்ளோ மாற்றமா? கூகுள் டூடுளை சுட்டிக்காட்டி தலாய் லாமா கவலை

Google Oneindia Tamil News

திபெத்: உலக புவி தினத்தை முன்னிட்டு, பருவ நிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்தும் வகையில் கூகுள் வெளியிட்டு இருக்கும் டூடுளை சுட்டிக்காட்டி திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மார்ச் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் புவியை பாதுகாப்பது குறித்தும், சுற்றுச்சூழல், மாசு, பருவநிலை மாற்றங்கள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய.. இந்திய கிராமங்களை எச்சரித்த சீனா? எல்லையில் நடந்த பரபர சம்பவம்தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய.. இந்திய கிராமங்களை எச்சரித்த சீனா? எல்லையில் நடந்த பரபர சம்பவம்

கூகுள் வெளியிட்ட டைம் லேப்ஸ் டூடுள்

கூகுள் வெளியிட்ட டைம் லேப்ஸ் டூடுள்

கூகுளும் தனது பங்கிற்கு இந்த நாளன்று மக்கள் மத்திய பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டூடுள் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. டைம் லேப்ஸ் முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ள அந்த டூடுள் 2000-இல் எடுக்கப்பட்ட பனி படர்ந்த நிலப்பரப்பின் டாப் ஆங்கில் புகைப்படமும், அதே பகுதியில் அதே போன்று 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமும் மாறி மாறி வருவதை போல் உருவாக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் பனிப்பிரதேசங்கள்

அழிந்து வரும் பனிப்பிரதேசங்கள்

அதில் 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் நிலப்பரப்பு முழுவதும் பனி படர்ந்து காணப்படுகிறது. 20 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட படத்தில் நிலப்பரப்பில் மிகக்குறைவான பனிக்கட்டிகளே காணப்படுகின்றன. அந்த அளவுக்கு பனி உருகியுள்ளது.

இதை சுட்டிக்காட்டியுள்ள திபெத் மத தலைவர் தலாய் லாமா, "புவி தினம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள், பறவைகள், பூச்சிகளும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

 தலாய் லாமா அறிவுறுத்தல்

தலாய் லாமா அறிவுறுத்தல்

புவி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருட்களை அதிகளவில் எரிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மனிதர்களான நமக்கு நல்ல விசயங்களை செய்ய மூளை வாய்ப்பு வழங்கும். ஆனால், இன்றைய உலகை நாம் உற்றுநோக்கினால், இதைவிட சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றும்.

மனிதநேயம் முக்கியம்

மனிதநேயம் முக்கியம்

நமது உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கக்கூடியது. பருவநிலை மாற்றம்போன்ற புதிய சவால்கள் நம்மை பாதித்து வருகின்றன. உலகம் குறித்து அக்கறைகொள்ள வேண்டும். பொருளாதாரத்துக்கு பங்காற்றுவதோடு மனிதநேயத்தை கருத்தில்கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரங்களை நட்டு பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

திபெத் பாலைவனமாகும் அபாயம்

திபெத் பாலைவனமாகும் அபாயம்

எனது வாழ்நாளில் பனிப்பொழிவு குறைவதை தற்போது பார்க்கிறேன். முதலில் திபெத்தில் இதை கண்டேன். பின் தர்மசாலாவில் பார்த்தேன். விஞ்ஞானிகள் என்னிடம் திபெத் பாலைவனமாகும் என எச்சரித்தனர். எனவேதான் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என நான் பேசுகிறேன். நமது வாழ்க்கை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நாம் எதிர்காலம் குறித்து கவலைகொள்ள வேண்டும்.

இளைஞர்களே நம்பிக்கை

இளைஞர்களே நம்பிக்கை

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என உறுதியாக நம்மால் சொல்ல முடியாது. ஆனால், நம்பிக்கையோடு இருப்போம். அதுவே தற்போது முக்கியம். புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் இதனை தடுக்க ஒன்றாக செயல்பட்டு தீர்வுகளை கண்டு வருகின்றனர். அவர்களே நமது நம்பிக்கை.

பூமிதான் நம் வீடு

பூமிதான் நம் வீடு

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வரும் நாம், மாற்றத்திற்கான கால அட்டவணையை அமைத்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். ஒரே கிரகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக இருக்க வேண்டும். பருவ நிலை மாற்றம் என்பது தேச எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல. அது அனைவரையும் பாதிக்கக்கூடியது. நாம் இயற்கையையும், நமது கண்டத்தையும் பாதுகாக்க வேண்டும். இது ஒன்றுதான் நமது வீடு." எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Snow regions changes like desert in 20 years - Dalai lama share advices about climate crisis: உலக புவி தினத்தை முன்னிட்டு, பருவ நிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்தும் வகையில் கூகுள் வெளியிட்டு இருக்கும் டூடுளை சுட்டிக்காட்டி திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X