For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்பு கை நீட்டினா சோப் விழாதா... இதிலுமா இன பேதம் - டுவிட்டரில் வெடிக்கும் சர்ச்சை!

கை கழுவும் இயந்திரத்தில் கை கழுவ கருப்பு தோலுடையவர்கள் கை நீட்டும் அது சோப்பை கையில் கொட்டாமல் இருக்கும் ஒரு வீடியோ டுவிட்டரில் வெளியாகி பலத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கை சுத்தம் செய்வதற்காக சோப்பு லிக்விட் தரும் இயந்திரம் வெள்ளை தோல் உடைய கை நீட்டும்போது தருகிறது. ஆனால் கருப்பு தோல் உடைய கையை நீட்டும்போது அது லிக்விட் சோப்பை தராமல் நிறுத்தி விடுகிறது.

இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 'சோப்பு இயந்திரத்தில் கூட இன பேதமா?' என்ற சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Soap liquid dispenser machine showing disparity among people and it creates debate in twitter

அஃபிக்போ என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் 45 நொடிகள் ஓடுகிற ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். ஒரு லிக்விட் சோப் இயந்திரத்தின் முன் கருப்புத் தோலுடைய ஒருவர் கையை நீட்டி லிக்விட் சோப் கையில் விழும் என காத்திருப்பார். ஆனால் அந்த இயந்திரத்தில் இருந்து லிக்விட் சோப் கடைசி வரை விழவேயில்லை. ஆனால், அவர் அருகில் இருக்கும் இயந்திரத்தில் வெள்ளை பேப்பரை எடுத்து அதைக் காண்பிக்கும் போது அதில் லிக்விட் சோப் உடனே விழும்.

இதுகுறித்து டிவிட்டரில் அஃபிக்போ தொழில்நுட்பத்தில் இன பேதம் காண்பித்தால் அது சமூகத்திலும் வெளிப்படும் என கோபமாக குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு நபர்கள் தங்கள் கருத்தை ஆதரவாகவும் எதிராகவும் தெரிவித்துள்ளனர்.

2015லில் இதேபோல் ஒரு வீடியோ அட்லண்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்டது. அதில் பேசியிருந்த ஃபிட்ஸ்பேட்ரிக் என்பவர்,''நான் அந்த அறையில் இருந்த 10 லிக்விட் சோப் இயந்திரங்களில் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அது நான் கைகளை நீட்டும்போது வேலை செய்யவில்லை. அதற்காக ஒவ்வொருமுறையும் என் நண்பரை சோப் எடுத்தத் தரக் கோரினேன்'' என கூறியிருந்தார்.

இந்த வீடியோவுக்கும் குற்றச்சாட்டுக்கும் அந்த சோப் லிக்விட் இயந்திர நிறுவனத்தின் துணைத்தலைவர் ரிச்சர்ட் விட்னி என்பவர் பதில் கூறியபோது, அம்மாதிரியான சோப் இயந்திரங்கள் 'இன்ஃப்ரா ரெட்' ஒளி கிடைத்ததும் சோப் வெளியேறுமாறு அமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. அதில் மாறுபட்ட நிறங்கள் வரும்போது தொழில்நுட்பம் வேலை செய்யாது என பதில் அளித்திருந்தார்.

ஆனால் தற்போது அஃபிக்போவின் வீடியோ டுவிட்டரில் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.

English summary
Chukwuemeka Afigbo posted a video which showed the disparity between white and black skin in soap dispenser and it created debate in twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X