சூரியனால் நடக்கப்போகும் பேரழிவு! மனித குலம் தப்பிக்குமா? ஆய்வாளர்கள் சொல்வது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்தப்புலம் மாறும். இந்த நேரங்களில் சூரியனிலிருந்து புயல் வெளியாகிறது. இப்போது இதுபோன்ற ஒரு புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த தாக்குதலிலிருந்து மனித குலம் தப்புமா? நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்புகள் எடுத்துள்ள பாதுகாப்பு முயற்சிகள் என்ன என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

NASA solar storm Earth

சூரிய புயல் என்றால் என்ன?

ஒரு காந்தத்தை எடுத்து நூலில் கட்டி தொங்கவிட்டால் அது வட-தென் திசையை காட்டி நிற்கும். இதன் மேம்பட்ட வடிவம்தான் காம்பஸ். பூமியில் காந்தப்புலம் இருப்பதால் அதை நோக்கி காந்தங்கள் ஈர்க்கப்படுகின்றன. இதேபோல சூரியனிலும் இருக்கிறது. இந்த காந்த புலம் நிலையாக இல்லாமல் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கேயேயும், அங்கேயும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வின்போது சூரியனிலிருந்து கதிர்வீச்சு வெடித்து கிளம்புகிறது. இதைத்தான் சூரிய புயல் என்கிறார்கள்.

2024 தொடங்கி 2026 வரை சூரியனில் காந்தப்புல மாற்றம் நடப்பதால் வலுவான சூரிய புயல்கள் உருவாகி வருகிறது என்றும், இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

புயல் எப்படி இருக்கும்?

நம்மூரில் கடலில் உருவாகிறதே புயல், அப்படி ஒரு சமயத்தில் ஒரே ஒரு புயல் மட்டும் உருவாகாது. தினம் தினம் ஒரு புயல் சூரியனில் உருவாகும். தினம் தினம் என்பதை விட ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு புயல் என்று சொன்னால் கூட பொருத்தமாகத்தான் இருக்கும். இந்த புயல்கள் ஒளியின் வேகத்தில் பூமியை நெருங்கும். அதாவது சூரியனில் புயல் உருவான 8வது நிமிடத்தில் அது பூமியை தாக்கும். எனவே இதிலிருந்து தப்பிப்பது, அல்லது புயல் உருவானதை கண்டுபிடிப்பதே கொஞ்சம் கஷ்டம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த புயல்கள் முதலில் நம்முடைய செயற்கைக்கோள்களைதான் தாக்கும். கடந்த 2022ம் ஆண்டு இதுபோன்ற புயல் ஒன்று எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் 40-ஐ தாக்கி அழித்தது. அழிக்கப்பட்ட செயற்கைக்கோள்களின் மதிப்பு ரூ.800 கோடி.

எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

இப்போது வரும் புயல் இதை விட வலிமையானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியிருப்பதால், மற்ற செயற்கைக்கோள்களும் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உதாரணத்திற்கு ஆதித்யா எல்-1 உட்பட இந்தியாவின் செயற்கைக்கோள்கள் செயலிழந்து போகலாம். மொத்த செயற்கைக்கோள்களும் செயலிழந்தால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். விமானங்கள், ராக்கெட்டுகள், ராணுவ பாதுகாப்பு வான் கருவிகள் உட்பட அனைத்தும் இந்த செயற்கைக்கோள்களை நம்பித்தான் இருக்கின்றன.

ஒரு சில நிமிடங்களுக்கு இந்த செயற்கைக்கோள்கள் செயலிழந்தாலும் அது பேரழிவை ஏற்படுத்தும். விமானங்கள் திசை தெரியாமல் விபத்தில் சிக்கலாம். கப்பல்கள் வழிமாறி போகலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதேபோல பூமியில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களும் செயலிழந்து போகும். அணு உலைகளை பாதுகாப்பதிலும், அதன் வெப்பநிலையை மெயின்டெயின் செய்வதிலும் மின்னணு கருவிகளின் பங்கு மிகப்பெரியது. அப்படி இருக்கையில், திடீரென அவை வேலை செய்யாமல் போனால் அணு உலைகள் கட்டுப்பாட்டை இழந்து வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாசா தொடங்கியிருக்கிறது.

NASA solar storm Earth

சூரிய புயல் பூமியை தாக்கினால் என்ன செய்வது? அதன் பாதிப்புகளிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது? உடனடியாக செய்ய வேண்டிய உதவிகள் என்ன? உள்ளிட்டவை நாசா குழுவால் பயிற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கிறது.

பூமியை காப்பாற்றும் வழி

இந்த நடவடிக்கைகள் போதுமானது இல்லை. இதை வைத்து அமெரிக்காவை கூட முழுமையாக காப்பாற்ற முடியாது. சரி எப்படித்தான் உலகத்தை காப்பாற்றுவது என்று கேட்கிறீர்களா? அது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா என எல்லா நாடுகளும் வேற்றுமையை மறந்து இது தொடர்பான ஆய்வை நடத்தினால் மனித குலம் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+