For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனி நிறுவன வெப்சைட்டை முடக்கி அதன் தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டோக்கியோ: சோனி நிறுவனத்தின் ஆன்லைன் இசை மற்றும் விளையாட்டு வெப்சைட்டுகள் முடக்கப்பட்டதுடன், அந்த நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.

ஜப்பானை தலைமையிடமாக கொண்ட சோனி நிறுவனத்தின் ஆன்லைன் இசை மற்றும் விளையாட்டு சார்ந்த வெப்சைட்டுகள் முடக்கிய விஷமிகள், அந்த வெப்சைட்டில், "சோனி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி பயணிக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது" என்றும் போஸ்ட் போட்டுவிட்டனர்.

sony

இதையடுத்து உஷாரான சோனி நிறுவனம், தனது அதிகாரிகள் யாரெல்லாம் விமான பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர் என்ற பட்டியலை எடுத்தது. அந்த பட்டியலின் மூலம், சோனியின் தலைவர் ஜான் ஸ்மெட்லி அமெரிக்காவில் விமான பயணத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஜான் இன்று, அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இருந்து சான்டிகோ பகுதிக்கு அமெரிக்க விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அமெரிக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சோனி நிறுவனத்திடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து, ஜான் பயணித்த விமானம், போனிக்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனிடையே, சோனி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், @LizardSquad என்ற பெயருள்ள ஒரு டிவிட்டர் பயனாளர், சோனி சர்வர்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி நாட்டப்பட்டுள்ளதாக, கீச்சு வெளியிட்டுள்ளார் என்று கூறினார். அந்த டிவிட்டில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடியுடன் ஒரு நபர் செல்வது போன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை என்று சோனியும், அதன் தலைவர் ஜான் ஸ்மெட்லியும் தெரிவித்துள்ளனர்.

English summary
Japanese entertainment giant Sony said on Monday its online music and gaming sites came under a cyber attack by a hacker group that also claimed there were explosives on a plane carrying a senior company executive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X