For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியைத் தாக்க வரும் பயங்கரமான சூரியப் புயல்... மனிதர்களைப் பாதிக்குமா?

Google Oneindia Tamil News

புளோரிடா: இந்த வார இறுதியில் மிகவும் சக்தி வாய்ந்த சூரிய புயல் வீசக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.

மே 5ம் தேதி பூமியின் பசிபிக் பிராந்தியத்தில் கடுமையான வெப்பத்தை பூமி சந்தித்தது. ஆனால் அடுத்து இதை விட மிகப் பெரிய வெப்பகரமான சூழலை பூமி சந்திக்கவுள்ளதாம். இLற்கு இந்த சக்தி வாய்ந்த சூரியப் புயலே காரணமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரிய புயல் மூன்று வகைப்படுகிறது. அவை சி, எம், மற்றும் எக்ஸ் வகைகளாகும். இவற்றில் எக்ஸ் வகை சூரிய புயல் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இது எம் சூரிய புயலைவிட 10 மடங்கு வலிமையானது ஆகும்.

Sun to Eject Harmful Radiation Towards Weekend; Will it Disturb Atmosphere and Affect Humans?

எக்ஸ் வகை சூரிய புயலினால் ரேடியோ, தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும். ஆனால், இந்த சூரியப் புயலினால் வளிமண்டலத்திற்கோ அல்லது மனிதர்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வானிலை கணிப்பு மையம் ( SWPC) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் இந்த வார இறுதியில் சக்தி வாய்ந்த சூரிய புயல் வீசக்கூடும் என அறிவித்துள்ளன. இதனை நாசாவும் உறுதி செய்துள்ளது.

இந்தப் புயலால் ஜி.பி.எஸ் , ரேடியோ, தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூரிய புயல் சூரியனில் கிழக்கு பகுதியில் உருவாகிறது. ஆனால் இந்த புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கவிலை என அமெரிக்க விண்வெளி வானிலை கணிப்பு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல சூரியனில் ஏற்படும் புயல்களால் பூமிக்கு ஆபத்து வரும் என பலமுறை கூறப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எந்தப் புயலும் பூமியை ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Pacific region witnessed the most powerful solar flare of the year on Tuesday, 5 May, according to National Aeronautics and Space Administration (NASA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X