பணியின்போதே சுய இன்பம் செய்யலாம்.. 30 நிமிட ‛பிரேக்'குடன் தனி அறை வழங்கிய நிறுவனம்! காரணம் இதுதான்
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். சில தனியார் நிறுவனங்களில் டீ பிரேக் கூட அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ‛சுயஇன்பம்' செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இது உண்மை. தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த வினோத ‛பிரேக்'கை வழங்கி உள்ள நிறுவனத்தின் பெயர் எரிகா லஸ்ட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார். இந்நிலையில் தான் கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மனஅழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மனஅழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மனஅழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது.
இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்' செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்' வழங்கி வருகிறார்.
மேலும் ‛சுயஇன்பம்' செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுயஇன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுயஇன்ப ‛பிரேக்கை' அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.
இதுதொடர்பாக எரிகா லஸ்ட் தனது சமூக வலைதள பக்கத்தில்,‛‛கடந்த 2021 ல், கொரோனா பரவலுக்கு பிறகு நானும், எனது அலுவலக ஊழியர்களும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டோம். கொரோனா பரவலுக்கு பிறகு இது எங்களின் வாழ்க்கையை பாதித்தது. இதனை முதலில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டோம். பதற்றமாக காணப்பட்டோம். இதனால் சுயஇன்ப மாதத்தை ஏற்படுத்தினேன். ஒரு மாதம் வரை ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் சுயஇன்ப பிரேக் வழங்கினேன்.
சுயஇன்பம் ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியையும், நிதானத்தையும் கொண்டு வந்தது. அதேபோல் படைப்பாற்றலுக்கு உதவியதோடு, கவனச்சிதறல்களை தவிர்த்தது. இதனால் சுயஇன்ப பிரேக் தொடர்பான கொள்கையை நிரந்தரமாக்கி உள்ளோம்'' என்றார்.
மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index - HDI) நார்வே பொதுவாக மிக உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் நாடுகளில் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் இந்தக் குறியீட்டில், நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வி மற்றும் நல்ல வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று அடிப்படை பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
சமீபத்திய அறிக்கைகளின்படி, நார்வே மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் முதல் சில இடங்களிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி (2025 அறிக்கை), ஐஸ்லாந்துக்கு அடுத்தபடியாக நார்வே 2வது இடத்தில் உள்ளது.
நார்வே மனித வள மேம்பாட்டில் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன: நார்வேயில் அனைவருக்கும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் உயர்தர சுகாதார சேவைகள் கிடைக்கின்றன. இது மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது. இதன் விளைவாக, நார்வேயில் பிறப்பு எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் (life expectancy at birth) மிக அதிகமாக உள்ளது.
நார்வே ஒரு வலுவான சமூக நலன் அரசைக் கொண்டுள்ளது. குடிமக்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு உள்ளது, இதில் வேலையின்மைப் பலன்கள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு, மகப்பேறு பலன்கள், குழந்தை பராமரிப்பு மானியங்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவை அடங்கும். இவை மக்களின் வாழ்க்கை பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதி செய்கின்றன. நார்வேயில் ஊழல் விகிதம் மிகக் குறைவு, இது ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான ஆட்சிக்கு வழிவகுக்கிறது. இந்த நிலையில்தான், சுய இன்பம் போன்ற இயல்பான விஷயங்களை அந்த நாடு இயல்பாக எடுத்துக்கொண்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications