லைஃப் டைம் செட்டில்மெண்ட்! தமிழருக்கு துபாய் லாட்டரியில் பரிசு.. 25 வருடத்திற்கு மாதம் ரூ.5.5 லட்சம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரக்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு துபாய் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.5 லடம் பரிசுத்தொகை கிடைக்கும் என்று லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் லாட்டரியில் அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழும் செய்திகளை கேள்வி பட்டு இருக்கிறோம். சமீபத்தில் ரூ. 25 கோடி பரிசுத்தொகை கொண்ட ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்குதான் கிடைத்தது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் இந்த பரிசுத்தொகை விழுந்தது. பரிசுத்தொகையை வாங்கவும் படாதபாடு பட்டு வாங்கினர்.

ஏனெனில் கள்ளச்சந்தையில் லாட்டரி சீட்டை வாங்கியதாக அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்தே புகார் பறந்தது. இதையடுத்து, கேரளாவுக்கு வந்த போதுதான் லாட்டரி சீட்டை வாங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகு பரிசுத்தொகையை அண்மையில் கேரள அரசு வழங்கியது. இது போக கடந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி கூட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கு கிடைத்தது.
25 ஆண்டுகளுக்கு: இப்படி கேரளவுக்கு விசிட் அடிக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் அங்கு லாட்டரி சீட்டை வாங்கும் போது திடீரென அதிர்ஷ்டம் அடிக்கும்... இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திலும் முதல் முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷட மழை கொட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி சீட்டை வாங்கிய இவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.5.5 லட்சம் பணமாக கிடைக்கும் வகையில் பரிசு அடித்துள்ளது.
உண்மையாகவே லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்துள்ளது. இது குறித்த விவரத்தை பார்ப்போம். தமிழ்நாட்டின் வேலூர் அருகே உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் மகேஷ் குமார் நடராஜன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் புராஜெக்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார்.
சமுதாயத்திற்கு: 4 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் நடராஜன் சவுதி அரேபியாவிற்கு துபாய் வழியாக வந்துள்ளார். அப்போது துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இவரது அதிர்ஷ்டம் இந்த லாட்டரிக்கு பம்பர் பரிசாக மாதம் தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் (5.5 லட்ச ரூபாய்) பரிசு கிடைத்துள்ளது. FAST5 Grand Prize என்ற நிறுவனத்தின் பரிசுத்தொகையை பெறும் ஐக்கிய அரபு அமீரகத்தை சாரத நபர் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
தனக்கு இந்த மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது குறித்து மகேஷ்குமார் நடராஜன் கூறுகையில், "எனது வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். எனது கல்வியை முடிக்க சமூகத்தில் பலரும் உதவினார்கள். தற்போது அந்த சமுதயாத்திற்கு திருப்பி கொடுப்பதற்கான நேரம் வந்துள்ளது. இந்த தொகை மூலமாக என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன்" என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications