எனது விடுமுறையை நானே நிர்ணயிக்கிறேன்... ஷார்ஜாவில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா : விடுமுறையை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன் என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

Tamil writer S. Ramakrishanan speech in Sharjah book festival

ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 11ஆம் தேதி தொடங்கி எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. வரும் 11ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும். இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள் தங்களது மொழி சார்ந்த இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியில் இந்த ஆண்டு இலக்கிய ஆளுமையாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டு சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடனான வாசகர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. அவரது துணையெழுத்து என்ற நூல் இந்த நிகழ்ச்சியின் கருவாக அமைக்கப்பட்டிருந்தது.

Tamil writer S. Ramakrishanan speech in Sharjah book festival

அவர் தனது உரையில் ''தன்னை இந்த புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் வாசகர்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன்'' என்று கூறினார்.

மேலும் அவர் தனது வேலை குறித்து கூறும் போது ''எனது வாழ்வை ஒரு எழுத்தாளனாக மட்டுமே அமைத்துள்ளேன். பலர் அரசு அல்லது அவரவரது விடுமுறைகளை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன்'' என்றார்.

Tamil writer S. Ramakrishanan speech in Sharjah book festival

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கம்பம் தினேஷ், மதுரை அக்மல் ஹசன், காரைக்குடி ஹமீத் உள்ளிட்ட வாசகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Famous Tamil writer S. Ramakrishanan has participated in Sharjah international book festival. He gave a wonderful talk on many accepts of Tamil literature.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற