ஆப்கானிஸ்தான் சிறையில் தமிழ் யூடியூபர்.. கைது செய்த “தாலிபான்கள்”! உறைய வைக்கும் “திக் திக்” நொடிகள்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து வீடியோ எடுக்க சென்ற பிரபல தமிழ் டிராவல் யூடியூபரான புவனிதரனை தாலிபான்கள் கைது செய்ததாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று ஏராளமான இளைஞர்கள் யூடியூப் சேனல்களை தொடங்கி பிரபலமாகி வருவதுடன் பொருளாதார அளவிலும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக மோட்டோ விலாக், உணவு விமர்சனம், சினிமா விமர்சனம், டிராவல் பகிர்வு என பல விதமான தமிழ் சேனல்களை காண முடியும்.

ஆனால், இவை அனைத்திலிருந்தும் மாறுபட்டது தமிழ் ட்ரெக்கர் யூடியூப் சேனல். தஞ்சாவூரை சேர்ந்த புவனிதரன் என்பவர் சாதாரணமாக தொடங்கிய இந்த யூடியூப் சேனல் தற்போது தமிழ் மக்களிடையே பிரபலமாகி இருக்கிறது.

ஆபத்தான நாடுகள்

ஆபத்தான நாடுகள்

மற்ற யூடியூபர்களை போன்று அல்லாமல் அரசியல் நெருக்கடிகள், பஞ்சம், வறுமை, போர் பதற்றம் நிறைந்த உயிருக்கு ஆபத்தானவை என கருதப்படும் நாடுகளுக்கு சென்று வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆப்பிரிக்காவில் சோமாலியா, எதியோப்பியா, நமீபியா, ஜாம்பியா, டான்சானியா என பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள பழங்குடி மக்களோடு சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் வீடியோ

சிரியாவில் வீடியோ

இதேபோல் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சென்று பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புவனிதரன் வீடியோக்களை வெளியிட்டார். அது அல்லாமல் மலேசியா, கம்போடியா, துபாய், தாய்லாந்து என பல உலக நாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு சென்று வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் புவனிதரன்.

பொதுபுத்தியை மாற்றிய புவனி

பொதுபுத்தியை மாற்றிய புவனி

பொதுவாக ஒரு நாடு என்றால் இப்படி இருக்கும், அந்த நாட்டு மக்கள் இந்த குணத்தில்தான் இருப்பார்கள் என்ற மக்களின் பொதுபுத்தியையும், அறியாமையையும் தனது வீடியோக்களின் மூலமாக உடைத்து இருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது தாலிபான்கள் ஆட்சியில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று இருக்கிறார்.

 ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட புரோமோவிலேயே, தாலிபான்களுடன் நின்றபடி அவர்களின் பாராம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு துப்பாக்கிகளை பிடித்தபடி வீடியோ வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற செய்தார். முதல் வீடியோ எப்போது வெளியாகும் என அவரது சப்ஸ்கிரைபர்கள் காத்திருந்த நிலையில் நேற்று அதை வெளியிட்டார் புவனிதரன்.

 ஆப்கான் பயணம்

ஆப்கான் பயணம்

இந்தியாவிலிருந்து துபாய் புறப்பட்டு, அங்கிருந்து காம் ஏர் என்ற ஆப்கானிஸ்தான் விமானத்தில் புறப்பட்டு அந்நாட்டு தலைநகரான காபூலுக்கு சென்றடைந்தார். அவருடன் வட இந்தியாவை சேர்ந்த மேலும் 2 யூடியூபர்களும் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்ற பின் விடுதியை பிடித்துவிட்டு விமான நிலையம் தொடங்கி காபூல் நகர வீதிகள் வரை பலவற்றை பதிவு செய்து தனது அனுபவங்களை பகிர்ந்தார் புவனிதரன்.

இயல்பான ஆப்கானிஸ்தான்

இயல்பான ஆப்கானிஸ்தான்

போர் தாக்குதல்களுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவது அதில் தெரிந்தது. மக்கள் இயல்பாக அவரவர் வேலையை செய்துகொண்டிருந்தனர். இயல்பாக இவர்களிடமும் பேசினர். ஆப்கானிஸ்தான் நாம் நினைக்கும் அளவுக்கு மோசமானது இல்லை என்றும், ஊரும் மக்களும் இயல்பாகவே இருப்பதாகவும் புவனிதரன் தனது அனுபவத்தை பதிவு செய்து இருந்தார்.

கைது செய்த தாலிபான்கள்

கைது செய்த தாலிபான்கள்

இந்த நிலையில் ஒரு சிம் கார்ட் கடைக்குள் புகுந்த அவரையும் மற்றொரு வட இந்திய யூடியூபரையும் தாலிபான்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர். சில மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட புவனிதரன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் தாலிபான்கள் தன்னுடைய கண்களை கட்டி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

"ஒரு சிறையில் என்னை அடைத்தார்கள். செல்போன், கேமராவை ஆய்வு செய்தார்கள். ஆவணங்களை பார்த்தார்கள். பின்னர் விசாரித்துவிட்டு சில மணி நேரம் கழித்து என்னை விடுவித்து விட்டார்கள். ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபரை உடன் வைத்துக் கொண்டு வீடியோக்களை எடுக்க சொன்னார்கள்." என்றார் புவனிதரன்.

திக் திக் அனுபவம்

திக் திக் அனுபவம்

அப்போது கைதாகாத மற்றொரு வட இந்திய "யூடியூர், சினிமாவில் வருவதைபோல் விரல்களை வெட்டிவிடுவார்கள், தலையை வெட்டிவிடுவார்கள், கொடுமைபடுத்துவார்கள் என்று நினைத்தேன்." என்று கூறியபோது புவனிதரனுடன் கைதான யூடியூர், "அவர்கள் எங்களை மிகவும் நல்ல விதமாகவே நடத்தினார்கள்." என்றார். இனி வீடியோ எடுக்க அனுமதித்தால் தொடர்ந்து இருப்போம் என்றும் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு கிளம்பிவிடுவோம் எனவும் புவனிதரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+