வெறும் 11 பேர் மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு.. அதுக்கு ஒரு ராஜா வேற.. எங்கே தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்டானியா: இத்தாலி அருகே உள்ள உலகின் மிகச்சிறிய நாடாக தவோலாரா என்னும் தீவு உள்ளது. இங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே வெறும் 11 தான் ஆகும்.

இத்தாலியின் சர்டானியா அருகே மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும 5 கிலோ மீட்டர் மட்டும்தான்.

இந்த குட்டி கிங்டம்மின் கிங் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம்.

எளிமையான அரசர்

எளிமையான அரசர்

எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை எளிதாக பார்த்து விடலாம் என்கின்றனர் மக்கள். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர்.

சாதாரண கால்சட்டை

சாதாரண கால்சட்டை

சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் இந்த ராஜா, சுற்றுலாப் பயணிகளின் படகு சவாரிக்காக படகோட்டியாகவும் உள்ளார். தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருந்தாலும் அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியம் குறித்து பெருமைப்படுகிறார்.

மக்கள் தொகை 11 தான்

மக்கள் தொகை 11 தான்

அரசரை விடுவோம். தவோலரா நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு என்று கூறினால் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் அந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 11 பேர் தான். அவர்களும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாம்.

விக்டோரியா மகாராணியிடம்..

விக்டோரியா மகாராணியிடம்..

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது.

பக்கிம்ஹாம் அரண்மனையில்

பக்கிம்ஹாம் அரண்மனையில்

அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையில் தவோலாரா அரசரின் புகைப்படமும் காட்சிக்கு உள்ளது.உலகின் எந்தவொரு நாடும் மிகச்சிறிய தீவான தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசர் குடும்பத்தின் படகு சேவை

அரசர் குடும்பத்தின் படகு சேவை

தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு வருகை புரிகின்றனர். பரந்து விரிந்து கிடக்கும் கடளின் நடுவே கோட்டையாக கம்பீரமாக வீற்றிருக்கிறது தவோலாரா தீவு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tavolara is a smallest country of the world. The island off the northeast coast of Sardinia, Italy. The island is a limestone massif 5 kilometres long and 1 kilometre wide, with steep cliffs except at its ends. In that smallest country's totall population is totally 11 members.
Please Wait while comments are loading...