திருப்பி அடித்த உக்ரைன்..! சொர்னோபில் அணுமின் நிலையம் மீட்பு.. மீண்டும் உக்கிரமாக தாக்கும் ரஷ்யா..!
கீவ் : செர்னோபில் அணு மின் நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அதனை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், இது போரில் திருப்புமுனையாக அமையும் என உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. பீரங்கிகள், ஏவுகணைகள் மூலம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக வல்லரசு நாடான ரஷ்யா சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்திருந்தாலும், அதனை அவ்வளவு சுலபமாக கைப்பற்றி விட முடியவில்லை. அந்த அளவுக்கு உக்ரைனும் ரஷ்யா மீது எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனுக்கு உதவி
ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலை நகர் கீவ்வை கைப்பற்ற மும்முரம் காட்டுகின்றன. பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. ராணுவத்தினருடன் மக்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி போராடி வருவது ரஷ்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

மின்கட்டமைப்புகள் சேதம்
இச்சூழலில் தான் செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டமைப்புகளை மீண்டும் சரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனத்தெரிவித்துள்ள உக்ரைன், அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் மின் வசதியின்றி இருந்தால் கதிர்வீச்சு அதிகரிக்கும்.ரஷியாவின் நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு உலக நாடுகள் ரஷியாவிடம் வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.

அணுமின் நிலையம் மீட்பு
இந்த நிலையில்தான் நான்கு நாட்களுக்குப் பிறகு ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செர்நோபில் அணுமின் நிலையம் மீட்கப்பட்டுள்ளது என உக்ரைன் கூறியுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறியுள்ளது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உங்களின் அணுசக்தி நிறுவனம் சேர்ந்த பல நிலையத்தின் பழுதான மின் இணைப்பு பகுதிகளை சரி செய்துள்ளதாகவும் தற்போது அணு மின் நிலையத்திற்கு தேவையான மின்சாரம் முழுவதையும் வழங்க முடியும் என்று தகவல் அளித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறியுள்ளது.
Recommended Video

கதிர்வீச்சு அபாயம்
தற்போதைய நிலவரப்படி டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக அனுமன் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படுவதாகவும் இதன் காரணமாக கதிர்வீச்சு அபாயம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள நிலையில், அதனை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார். இது போர் நிறுத்த நடவடிக்கையில் பின்னடைவாக கருதப்பட்டாலும், உக்ரைன் ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications