For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுவில் கொஞ்சம் காணாமல் போய்... பின் மீண்டு வந்த ப்ளூட்டோ விண்கலம் நியூ ஹாரிஸான்ஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ப்ளூட்டோ கிரகத்தை நாளை கடக்கவுள்ள நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது நடுவில் கொஞ்சம் காணாமல் போய் திரும்பி வந்த பிள்ளை..! சந்தையில் காணாமல் போய் திரும்பி வந்த குழந்தையைப் பார்த்தால் எப்படி பெற்றவர்கள் சந்தோஷப்படுவார்களோ அதேபோல திடீரென மறைந்து போன நியூ ஹாரிஸான்ஸ் மீண்டும் தொடர்புக்கு வந்தபோதும், நாசா விஞ்ஞானிகள் அளவற்ற மகிழ்ச்சியில் மூழ்கினர்.

ஜூலை 4ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. திடீரென நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் தொடர்பு இழந்து மறைந்து போனதால் நாசாவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. என்ன ஆனதோ விண்கலத்துக்கு என்ற கவலை.

கிட்டத்தட்ட ஒன்பதரை வருடங்களாக பயணித்து, ப்ளூட்டோவை நெருங்கப் போகும் நிலையில் விண்கலம் மறைந்தால் வரும் பதட்டம் அது. இதையடுத்து விண்கலத்தின் தொடர்பை மீண்டும் புதுப்பிக்க தீவிர முயற்சிகள் தொடங்கின.

காணாமல் போனது

காணாமல் போனது

ஆனால் நியூ ஹாரிஸான்ஸ் என்ன ஆனது என்று எந்தக் க்ளூவும் கிடைக்கவில்லை. மீண்டும் தொடர்பு கிடைக்கவில்லை.

கருந்துளையில் சிக்கியதா?

கருந்துளையில் சிக்கியதா?

ஒரு வேளை கருந்துளை ஏதாவது ஒன்றில் சிக்கி காணாமல் போயிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. அல்லது ஏதாவது விண்கல் மோதி சேதமடைந்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆய்வு...

ஆய்வு...

விண்கலம் மறைந்ததுமே மிஷன் ஆபரேஷன் மேனேஜர் ஆலிஸ் போமேன், திட்ட மேனேஜன் கிளன் பவுன்டைனை அழைத்தார். மத்தியான தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கிளன், தகவல் கேட்டதும் பதறிப் போய் ஓடி வந்தார். உடனடியாக லாரல் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு விரைந்த கிளன், என்ன நடந்தது என்ற ஆய்வில் மற்றவர்களுடன் இறங்கினார்.

குழப்பம்...

குழப்பம்...

பலருக்கு தூக்கமே போய் விட்டது. விண்கலம் மறைந்தது பெரும் குழப்பமாகி விட்டது. காரணம், அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது குழப்பமாகவே இருந்தது.

திரும்பக் கிடைத்தது...

திரும்பக் கிடைத்தது...

ஆனால் அடுத்த 2 நாட்களில் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் விண்கலம் மீண்டும் தொடர்புக்கு வந்தது. அத்தனை பேருக்குஆனால் அடுத்த 2 நாட்களில் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் விண்கலம் மீண்டும் தொடர்புக்கு வந்தது. அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்ப வந்தது.ம் போன உயிர் திரும்ப வந்தது.

அப்பல்லோ 13 விண்கலம்...

அப்பல்லோ 13 விண்கலம்...

கிட்டத்தட்ட அப்பல்லோ 13 விண்கலத்துக்கு ஏற்பட்ட கதியே நியூ ஹாரிஸான்ஸுக்கும் ஏற்பட்டதாக முடிவு கட்டியிருந்த நிலையில் தொடர்பு மீண்டும் கிடைத்தது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது.

இப்படியாக ஜூலை 4ம் தேதி காணாமல் போய் திரும்பி வந்த நியூ ஹாரிஸான்ஸ் நாளை ப்ளூட்டோ கிரகத்தைக் கடந்து சென்று வரலாற்றில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The people in the Mission Operations Center — “the MOC” — had been tracking NASA’s New Horizons spacecraft for 9.5 years as it journeyed the breadth of the solar system. It was just 10 days away from the dwarf planet Pluto when, at 1:55 p.m. on July 4, it vanished.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X