சிலந்தி குரங்குகிடம் சேட்டை.. சிறுமி பட்டபாடு.. களேபரமான மெக்சிகோ சரணாலயம்!
மெக்சிகோ: வன விலங்குகள் மிகவும் அற்புதமானவை. அதே நேரத்தில் மிகவும் ஆபத்தானவையும் கூட. இப்படியான விலங்குகளை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் சிறந்தது. ஆனால் நம்மில் சிலர் உள்ளனர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அமைதியாக உள்ள அவைகளை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவது, செல்ஃபி எடுப்பது, என அதை ஒரு வளர்ப்புப் பிராணியாக கருதி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி குரங்கு ஒன்றை வெறுப்பேற்றியதால் சிறுமி ஒருவர் பட்டபாடுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சிலந்தி குரங்குகள் பொதுவாக தென்னாப்பிரிக்க காடுகள் முதல் மெக்சிகோ வரை பரந்து காணப்படுகிறது. கூட்டு குடும்பமாக வாழும் இந்த குரங்குகள் புத்திசாலித்தனமானவையாகும். பொதுவாக பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும். சில நேரங்களில் சின்ன சின்ன பூச்சிகளையும் இது தனது உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ளும். காடுகளில் மட்டுமே வசிப்பதால் சற்று மூர்க்கமாகவே காணப்படும். எளிதில் பதற்றமுற்று தனது எதிரிகளுடன் சண்டைக்கு செல்லும் குணமுடையது.

இப்படியான குணாதிசயங்களை கொண்ட இந்த குரங்குகள் மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த குரங்குகள் ஒரு நல்ல டைம்பாஸ். வழக்கமாக இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்கையில் சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் ஒன்று இந்த சரணாலயத்திற்கு வந்துள்ளது.
குடும்பம் என்றால் குட்டீஸ் இல்லாமையா? ஆக எல்லோருமாக எல்லா விலங்குகளையும் பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். அப்படியே இந்த சிலந்தி குரங்குகள் அடைக்கப்பட்ட கூண்டு இருக்கும் இடத்திற்கும் வந்துள்ளனர். பெருமக்களெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க குட்டீஸ் எல்லாம் சேட்டையில் இறங்கினர்.
குடும்பத்துடன் வந்த சிறுமி ஒருவர் குரங்கின் அருகில் சென்று சென்போனில் அதை படமெடுக்கத் தொடங்கினார். படமெடுத்தோமா, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோமா என இல்லாமல் அந்த குரங்கை வம்பிழுத்துள்ளார். நாம்தான் அங்கிருந்து பரினாமமடைந்து வந்துவிட்டோம். ஆனால் குரங்குகள் இன்னமும் குரங்குகளாகவே உள்ளன. அப்படி இருக்கையில் மனிதர்களே இவ்வளவு பண்ணும்போது அது என்ன சும்மாவா இருக்கும்?
ஆமாங்க கையை வெளியில் நீட்டி அந்த சிறுமியின் தலைமுடியை கொத்தாக பிடித்துவிட்டது. அப்புறம் என்ன? சிறுமி கத்த, குரங்கு கத்த அதை பார்த்து சுற்றி இருந்தவங்க கத்த ஒரே கத்தல்தான். ஆனாலும் குரங்கு முடியை விட்டபாடில்லை. குரங்காச்சே சும்மாவா?? பக்கத்திலிருந்த ஒருவர் சட்டையை கழட்டி குரங்கை பயமுறுத்த கடைசியில் அது போய் தொலைங்கடானு விட்டுடுச்சு.
சரி குரங்குதான் விட்டுடுச்சுல்ல நம்ம வழியை பார்த்துட்டு வர வேண்டியதுதானே? அந்த சிறுமி மறுபடியும் குரங்கை நெருங்கியவாறு வேறு பகுதிக்கு போக முயற்சிக்க மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா சிறுமியோட முடியை புடிச்சுடுச்சு குரங்கு.
அப்புறம் என்ன? சிறுமி கத்த, குரங்கு கத்த கூட்டம் மட்டும் குபீர்னு சிரிச்சுடுச்சு. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மிருகங்கள் ஆபத்தானவை மக்களே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications