For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிற்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்.. உள்ளே இருந்த 'முக்கிய நபர்' யார் தெரியுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இருந்தது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய தலைவர் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இருந்தது இவர்தான்- வீடியோ

    டெல்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டரில் இருந்தது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய தலைவர் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்று மதியம் இந்தியாவின் காஷ்மீர் எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் நுழைந்து இருக்கிறது. காஷ்மீரின் பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் இந்த அத்துமீறலை நிகழ்த்தி உள்ளது.

    இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    [ அட்டகாசமான அக்டோபர் மாதம்... யாருக்கு பணவரவு? ரொமான்ஸ் எந்த ராசிக்கு? ]

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    சரியாக 12.05 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் முதலில் இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் 30 நிமிடம் இந்திய எல்லைக்குள்தான் சுற்றி இருக்கிறது. அந்த ஹெலிகாப்டர் உள்ளே வருவது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. கடைசியாக இந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரை நோக்கி சென்றுள்ளது.

    சுட்டு வீழ்த்த முயற்சி

    இந்திய ராணுவ வீரர்கள் அதை சுட முயற்சி செய்து இருக்கிறார்கள். கால் மணி நேரம் இப்படி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    யார் இவர்?

    யார் இவர்?

    இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிக முக்கியமான தலைவர் ஆவார். இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது.

    என்ன செய்கிறார்

    என்ன செய்கிறார்

    இவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்து இருக்கும் காஷ்மீரின் பிரதமர் என்று அழைக்கப்படுகிறார். அங்கு இருக்கும் பகுதிகளை பார்வையிட இவர் வந்துள்ளார். இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று பாகிஸ்தான் செய்தி சேனல்கள் உறுதிபடுத்தி இருக்கிறது.

    English summary
    The POK PM on the helicopter that violated border in Kashmir. Yesterday Pakistan helicopter comes to India border of Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X