உயரப் பறந்த ரஷ்ய விமானம்..சுட்டு வீழ்த்திய உக்ரேனிய ராணுவம்..விமானி சிறைபிடிப்பு.. பதைபதைப்பு காட்சி
கீவ் : உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரேனிய ராணுவத்தினர், தாக்குதல் விமானத்தின் விமானியை சிறைபிடித்த பதைபதைப்பு காட்சிகளை வெளியிட்டு உள்ளனர்.
நேட்டோ அமைப்பில் தன்னை சேர்க்க கோரிய உக்ரைனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் எல்லையில் படைகளை குவித்து தாக்குதல் நோக்கோடு காத்திருந்தது ரஷ்யா.
பல உலக நாடுகளின் கோரிக்கைகளை ஏற்காமல் கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா, முதல் நாளிலேயே ஏவுகணைகள் மற்றும் குண்டுமழை பொலிந்து உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் போர்
ராணுவ கண்காணிப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் விமான நிலையங்கள் துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கிய ரஷ்யா பின்னர் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அடுத்தடுத்து அதிரடி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் நாட்டின் முக்கியமான நகரங்களுக்குள் நுழைந்த ரஷ்யாவின் ராணுவ படையினர் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர் அவர்களுக்கு ஆதரவாக ஏவுகணைகளும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

வெளியேறிய மக்கள்
ரஷ்யாவின் மூர்க்கமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நகர் பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். மேலும் பலர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள், வீடுகளின் அடிப்பகுதி தங்கள் உயிரை காத்துக் கொண்டனர். மேலும் பலர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். போர் பதற்றம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் நாடுகளை விட்டு வெளியேறிய நிலையில் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் மீட்பு பணிகளுக்காக போர் நிறுத்தத்தை அறிவித்தது.

தற்காலிக நிறுத்தம்
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்நேவாகா ஆகிய இரண்டு நகரங்களில் இன்று முதல் தாற்காலிக போர்நிறுத்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய காட்சிகளை உக்ரேனிய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

வீழ்த்தப்பட்ட ராணுவ விமானம்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சம்பவத்தில் விமானத்தின் துணை விமானி உயிரிழந்துள்ளார். செர்னிஹவ் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேஜர் கிரிவேலபோவ் என்ற துணை விமானி தான் கொல்லப்பட்டுள்ளார். விமானத்தின் முக்கிய விமானியான கிராஸ்நியஸ்டோவ் தாக்கப்பட்ட விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தப்பிய வீடியோவை உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

மக்கள் பாதிப்பு
சொர்னிஹிப் பகுதியில் ரஷ்ய விமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இருபத்தி இரண்டு உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ள நிலையில் தாக்குதல் நடத்தப் பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரஷ்ய ராணுவம் அத்துமீறி பள்ளிகள் மற்றும் மக்கள் வசிக்கும் வீடுகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications