அழகிகளுக்கு கொரோனா ... தள்ளிப்போன உலக அழகி போட்டி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..
போர்ட்டோ ரிக்கோ: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த இந்திய அழகி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டி போர்ட்டோரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக போட்டி தள்ளி வைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்ள இருந்த இந்திய அழகியான மானசா வாரணாசி உட்பட பல போட்டியாளர்களுக்கு குறிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வகையில் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மிஸ் வேர்ல்டு 2021 நிகழ்வை மேற்பார்வையிட பணியமர்த்தப்பட்ட வைரலாஜிஸ்டுகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் போர்ட்டோ ரிகோ சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடிய பின்னர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் . அடுத்த 90 நாட்களுக்குள் போட்டோ ரிகோ நகரி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜூலியா மோர்லி கூறுகையில் மிஸ்.வேர்ல்ட் பட்டத்திற்காக போட்டியிட எங்கள் போட்டியாளர்கள் திரும்பி வருவதை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த மிஸ் இந்திய வேர்ல்டு போட்டியாளரான மானசா வாரணாசிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் போர்ட்டோரிக்கோவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அழகிப் போட்டியில் இந்திய பிரிவான பெமினா மிஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதிப் போட்டியை நிறுத்திய திருமதி மோர்லிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மிஸ் இந்திய அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், மிஸ் வேர்ல்டு அணி மற்றும் பிற போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், மானசா வாரணாசி அபரிமிதமான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும் அவர் உலக அரங்கை அலங்கரிக்க முடியாமல் போனது சிறிது மன வருத்தத்தை தந்த போதிலும் அவரது பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் எனவும் போட்டியாளர்கள் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications