For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு- உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என ரஷ்யா அறிவிப்பு

போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தொடரும் எனவும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா வியாழக்கிழமையன்று படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க தொடங்கின.

Ukraine rejected talks...Russia announces attack continue on Ukraine

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து ரஷியா 3வது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கீவ் ராணுவதளத்தை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

தலைநகர் கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தினர் மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.

இந்நிலையில், போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தொடரும் எனவும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். போர் மேலும் தீவிரமடைவதால் பல லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

English summary
Russia's Kremlin has accused Ukraine of refusing to stop the war and negotiate. Russian spokesman Peskov said the attack would continue because Ukraine had not come forward to negotiate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X