For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல நேரத்தில் பேசுனீங்க.. மோடிக்கு நன்றி.. புகழ்ந்து தள்ளிய உக்ரைன் எம்பி.. என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

கீவ்: ‛‛இந்த நூற்றாண்டின் விதியை மாற்றும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றும். மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி'' என உக்ரைன் நாட்டின் இளம்வயது எம்பி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது இன்று 14 வது நாளாக ரஷ்யாவின் போர் நீடிக்கிறது. இந்த போரில் இந்தியா தலையிட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் புடினுடன் பேசி போரை நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக உக்ரைன் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புடினுடன் பேசினார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். போரை கைவிடும்படி கூறினார். இதேபோல் பல நாட்டு தலைவர்கள் பேசியுள்ளனர். ஆனால் புடின் போர் நடவடிக்கையில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை.

சண்டை செய்யும் மக்கள்

சண்டை செய்யும் மக்கள்

உக்ரைனின் நாலாபுறமும் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. வெடிகுண்டுகள், ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்படுகிறது. இதனால் உக்ரைனில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி மெட்ரோ ரயில் சுரங்கங்கள், பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ளனர். மேலும் தாய்நாட்டை காக்க உக்ரைன் மக்களும் துப்பாக்கி ஏந்தி போர்களத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

துப்பாக்கியுடன் இளம் எம்பி

துப்பாக்கியுடன் இளம் எம்பி

உக்ரைனில் 26 எம்பியான ஸ்விடோஸ்லாவ் யுராஷ் என்பவரும் கையில் ஏகே 47 துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார். அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் கட்சியை சேர்ந்த இவர் அந்த நாட்டின் இளம்வயது எம்பியாவார். சமீபத்தில் இவர் இன்ஸ்டா பக்கத்தில், ஏகே 47 துப்பாக்கியுடன் நிற்பது போன்ற படத்தை வெளியிட்டார். மேலும், ‛‛கீவ் நகருக்கான போர் துவங்கி விட்டது'' என எழுதியிருந்தார். மேலும், ‛‛உக்ரைன் நாட்டுக்கான தருணம் இது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த நாட்டை அர்ப்பணிக்க நாம் போராட வேண்டும்‛‛ என கூறியிருந்தார்.

மோடிக்கு நன்றி

மோடிக்கு நன்றி

இந்நிலையில் எம்பி ஸ்விடோஸ்லாவ் யுராஷ் இந்தியா குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,‛‛உக்ரைன் முழுவதும், ரஷ்ய படைகள் மக்களை கொல்கின்றனர். நம் தேசத்தை பயமுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அது எங்களுக்கு வேறுவிதமான சக்தியை வழங்குகிறது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க ஆக்ரோஷமாக போராட துண்டுகிறது. இந்த நூற்றாண்டின் விதியை மாற்றும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ரஷ்யா உடனான உறவுக்கு அப்பாற்பட்டு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதற்கும், மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

Recommended Video

    Russia இந்தியாவுக்கு செய்த மறக்க முடியாத உதவி | Oneindia Tamil
    ரஷ்யாவை தண்டிக்க..

    ரஷ்யாவை தண்டிக்க..

    இந்தியா-ரஷ்யா இடையே நீண்டகாலமாக உத்தியோகபூர்வ நட்பு, ஒப்பந்தம் உள்ளது. உக்ரைன் மீதான போர் மட்டுமின்றி 20 ஆண்டுகளாக ரஷ்ய அதிபர் புடின் செய்து வரும் தவறான செயல்களை கருத்தில் கொண்டு இந்தியா தனது உறவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ரஷ்யாவை இந்தியா தண்டிக்க வேண்டும். ரஷ்யா போர் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தால் நாங்களும் போராட தயாராக உள்ளோம். எங்களின் முன்னோர்கள் பாதுகாத்தது போல் நாங்களும் உக்ரைனை பாதுகாக்க விரும்புகிறோம். நாட்டின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுகிறோம். இதை ஒருபோதும் விட்டு கொடுப்பது இல்லை'' என கூறியுள்ளார்.

    English summary
    India is one of the countries that will change the fate of this century. Thanks to Indian Prime Minister Narendra Modi for his help on humanitarian grounds”, says Sviatoslav Yurash, the young Ukrainian M.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X