அந்த 90 நிமிடம்! புடினிடன் "சீறிய" பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. போன் காலுக்கு பின் சொன்ன ஷாக் செய்தி!
மாஸ்கோ: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினிடம் நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் நீண்ட நேரம் போனில் பேசினார். இந்த உரையாடல் விவரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் உச்சம் அடைந்துள்ளது. போர் சரியாக 8வது நாளை தொட்டுள்ளது. இன்று கார்கிவ் பகுதியில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருகிறது.
அங்கு தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில்தான் ரஷ்யா - உக்ரைன் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆகும், இதிலும் பெரிய அளவில் உடன்படிக்கை எதுவும் ஏற்படவில்லை. அதே சமயம் போர் நடக்கும் இடங்களில் கிரீன் காரிடார் உருவாக்க ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் இங்கு மட்டும் போர் நிறுத்தப்பட்டு அதன் வழியாக மக்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

90 நிமிடம்
இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே நேற்று அதிபர் புடினுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் போனில் பேசினார். இவர்களின் போர் உரையாடலே ஆச்சர்யமானது. ஏனென்றால் மேக்ரூன் புடினை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை கொண்டு வர வேண்டுமென்று மேக்ரூன் கூறி வந்தார். இந்த நிலையில்தான் நேற்று இவர்கள் 90 நிமிடம் போனில் பேசிக்கொண்டனர். போரை நிறுத்தும்படி இதில் மேக்ரூன் கோரிக்கை விடுத்தார்.

பிரான்ஸ் அறிக்கை
இந்த போன் உரையாடல் பற்றி சர்வதேச ஊடகங்களுக்கு பிரான்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் இனிமேல்தான் மோசமான நாட்கள் வர போவதாக அச்சப்படுகிறார்... the worst is to come.. உக்ரைனை மொத்தமாக பிடிக்கும் முடிவில் புடின் இருக்கிறார். அவர் எந்த விதமான பொருளாதார தடைகள் பற்றியும் கவலைப்படவில்லை. மிக மோசமான நாட்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

புடின் என்ன சொன்னார்?
என்னிடம் புடின் சொன்னதை வைத்து பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது. புடின் என்னிடம் நம்பிக்கை அளிக்க கூடிய விஷயங்கள் எதையும் புடின் சொல்லவில்லை. அவர் போரை தொடர்ந்து தீவிரமாக நடத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறார். அவரே என்னிடம் இதை பற்றி தெரிவித்தார். உக்ரைனை மொத்தமாக புடிக்க போகிறேன் என்று குறிப்பிட்டார்.

உக்ரைனை ஆக்கிரமிப்பேன்
அவர் தனது சொந்த வார்த்தைகளில்.. நான் உக்ரைனை மொத்தமாக ஆக்கிரமிப்பேன்.. உக்ரைன் நாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பேன். உக்ரைன் கடைசியில் சுதந்திரம் அடையும். என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் கூறிய வார்த்தைகள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மேக்ரூன் சார்பில் வெளியிடப்பட்ட அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மோசமான நாட்கள்
மோசமான நாட்கள் இனிதான் வரப்போகிறது என்று மேக்ரூன் குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. அவர் எதை சுட்டிக்காட்டி இப்படி சொல்கிறார், தீவிர உக்ரைனை போரை குறிப்பிடுகிறாரா அல்லது அணு ஆயுத போரை குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போர் காலுக்கு பின் ரஷ்யாவின் தரப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், உக்ரைனில் நடுநிலையான அரசை நிலைநாட்ட வேண்டும்.
Recommended Video

ரஷ்யா ஸ்பெஷல் ஆபரேஷன்
அங்கு ரஷ்யா சார்பாக ஸ்பெஷல் ஆபரேஷன் நடக்கிறது. அது சரியான திசையில் பிளான்படி சென்று கொண்டு இருக்கிறது. ரஷ்யாவை பற்றி உக்ரைன் தவறான தகவல்களை பரப்புகிறது. ரஷ்ய படைகள் மக்களை தாக்கவில்லை. முடிந்த அளவு ரஷ்ய படைகள்தான் மக்களை காப்பாற்றி வருகிறது. உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் ரஷ்யாவின் கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்று ரஷ்ய தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications