For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக ஊடகங்களில் விதிகளை மீறி கணக்குத் தொடங்கும் சிறுவர்கள்

By BBC News தமிழ்
|
மொபைலை பயன்படுத்தும் குழந்தைகள்
Thinkstock
மொபைலை பயன்படுத்தும் குழந்தைகள்

பெரும்பாலான சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்க குறைந்தபட்சம் பதிமூன்று வயது தேவை என்றாலும் பதினோரு மற்றும் பனிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேருக்கு சமூக வலைதளத்தில் கணக்கு உள்ளதாக தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணையமான ஆஃப்காம் தெரிவித்துள்ளது.

இந்த கணக்குகள் விஷயம் குறித்து அரசு செயல்படவேண்டும் எனக்கோரியுள்ளது குழந்தைகள் தொண்டு நிறுவனமான என்.எஸ்.பி.சி.சி.

சமூக வலைதளங்களில் இருந்து தங்களுக்கான செய்தியை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆனால் போலி செய்திகள் குறித்து அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாக ஊடக கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் இருந்து அவர்கள் பெறும் செய்திகளை உண்மை என நம்புபவர்களின் எண்ணிக்கை வெறும் 32% மட்டுமே.

ஆஃப்காமின் குழந்தைகள் பெற்றோர்கள் ஊடக பயன்பாடு மற்றும் அணுகுமுறை அறிக்கையின்படி, பதினோரு வயதினரில் 46 சதவிகிதமும் பனிரெண்டு வயதினரில் 51 சதவிகிதமும் பத்து வயதினரில் 28 சதவிகிதமும் தற்போது சமூக வலைதளத்தில் கணக்கு வைத்திருக்கின்றனர்.

13 வயதுக்குட்பட்டோர் கணக்கு தொடங்குவது குறித்து சமூக ஊடங்கள் கண்டுகொள்வதில்லை என்று என்.எஸ்.பி.சி.சி தெரிவித்துள்ளது. பெரிய தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் தங்களது தளங்களில் குழந்தைகளை பாதுகாக்க தவறிவிட்டன. அரசு அவசரமாக இது குறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தகவல் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் சமுக ஊடகங்கள் தங்களது தளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திட்டங்களை வடிவமைக்க அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என என்.எஸ்.பி.சி.சி பரிந்துரை செய்துள்ளது.

ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் முன் பதின்பருவ வயதினர் கணக்கு தொடங்குவதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளதாக தெரிவித்துளார். இன்ஸ்டாகிராமையும் ஃபேஸ்புக் நிறுவனமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

''எங்களுக்கு எப்போது பதிமூன்று வயதுக்குக் குறைவான ஒருவர் தனது வயதை பொய்யாக காண்பித்து கணக்கு தொடங்குவதாகத் தெரிகிறதோ, அப்போதே அவர்களின் கணக்கை நீக்கிவிடுகிறோம். மேலும் அவர்கள் மீண்டும் கணக்கு தொடங்கமுடியாதபடி செய்துவிடுகிறோம்'' என்றார் ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர்.

ஸ்னாப்சாட்டின் கருத்தையும் அறிய பிபிசி முயன்றது.

செய்திதாள் படிக்கும் குழந்தை
Getty Images
செய்திதாள் படிக்கும் குழந்தை

போலி செய்திகள் :-

12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒப்பீட்டளவில் செய்திகளை நுகர்வதில் அதிநவீன நுகர்வோர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

55 சதவீதத்தினர் ஆன்லைன் செய்திகளை படிப்பதற்காக ஸ்னாப்சாட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக செய்திகளை படிக்க சமூக வலைதளங்களை அணுகுகின்றனர்.

போலி செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (73%) உள்ளனர். அவ்வாறு எச்சரிக்கையுடன் இருப்பவர்களில் 86% பேர் செய்தியின் உண்மையை அறிய முயல்கின்றனர்.

எவ்வாறு செய்தியின் உண்மையை அறிகின்றனர்?

  • தான் பார்த்த செய்தி வேறு எங்கேனும் வெளியிடப்பட்டிருக்கிறதா என்பதை 48% பேர் கவனிக்கிறார்கள்.
  • நம்பகத்தன்மையை சரிபார்க்க அந்த செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள பதில்களை 39% பேர் சரிபார்க்கிறார்கள்.
  • அவர்கள் நம்பும் செய்தி நிறுவனம் ஏதாவது இந்த செய்தியின் பின் உள்ளதா என 26% சரிபார்க்கிறார்கள்.
  • கட்டுரையின் தொழில்முறை தரத்தை 20% பேர் அணுகுகிறார்கள்.

இளைஞர்கள் மத்தியில் ஸ்னாப்சாட்டின் மதிப்பு அதிகரித்து வருவதாகவும் அதேவேளையில் ஃபேஸ்புக் மீதான ஆர்வம் குறைந்து வருவதாகவும் ஆஃப்காம் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு சமூக வலைத்தள கணக்கு வைத்திருந்த 12 முதல் 15 வயதினரில் 69% பேரில் 66 சதவீதத்தினர் ஃபேஸ்புக்கை பிரதானமாக கருதினார்கள். அது தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் ஒரு மோசமான செய்தி என்னவெனில் குழந்தைகள் மத்தியில் பாரம்பரிய செய்தி ஒளிபரப்பாளர்களான பிபிசி மற்றும் ஐ.டிவி-யை விட யூடியூப் மிகவும் பிரபலமான பிராண்டாக மாறியுள்ளது.

12 முதல் 15 வயதினரில் 90% பேர் யூடியூபை பயன்படுத்துகின்றனர். இசை வீடியோக்கள், கேளிக்கை மற்றும் சவால் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அவர்கள் பார்க்கின்றனர்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
Half of children aged 11 and 12 have a social media profile, despite most platforms' minimum age being 13, a study from regulator Ofcom suggests.Children's charity the NSPCC called on the government to act on the issue of under-age profiles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X