For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

 US California nurse tests Corona positive after receiving Pfizer vaccine

இதனிடையே கலிபோர்னியாவில் கடந்த வாரம் 45 வயது செவிலியர் மேத்யூ என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால் ஒரே வாரத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசியான ஃபைசர் முழுவதுமாக செயல்படுவதற்கு 10 முதல் 14 நாட்கள் ஆகும். அப்போதுதான் கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை பரிசீலனை செய்யும் இந்தியா... அவரச பயன்பாட்டிற்கு இன்று அனுமதி? ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை பரிசீலனை செய்யும் இந்தியா... அவரச பயன்பாட்டிற்கு இன்று அனுமதி?

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 50% வரை பாதுகாப்பு கொடுக்கும். 2-வது டோஸும் போட்டுக் கொண்டால் 90% பாதுகாப்பு கிடைக்கும் என்கின்றனர்.

English summary
US California nurse tested Corona virsu positive a week after receiving Pfizer vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X