முளைச்சி 4 இலைதான் விட்டிருக்கு.. இந்த தம்மாத்துண்டு செடிக்கு வந்த வாழ்வை பாருங்க! பரபரக்கும் நியூஸி
வெல்லிங்டன்: நியூஸிலாந்தில் ஒரு சிறிய செடி ஒன்று ரூ 4 லட்சத்திற்கு விற்பனையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு 4 லட்சம் உங்களிடம் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கார், வெளிநாட்டு பைக்குகள், வீடு வாங்க (முன்பணம்), நகை அல்லது ஏதேனும் ஒரு ஆடம்பர பொருட்களைத்தான் வாங்குவீர்கள்.
இந்த பட்டியல் குறைவுதான், இன்னும் சிலரிடம் கேட்டால் லிஸ்ட் பெரிசாகிக் கொண்டே இருக்கும்.

விவசாயம்
ஒரு வேளை உங்களுக்கு ரூ 4 லட்சம் கிடைத்தால் அந்த பணத்திற்கு செடி வாங்குவீர்களா. இந்த கேள்விக்கு நிச்சயம் சுற்றுச்சூழல் நல விரும்பிகளிடம் கேட்டால் நிச்சயம் வாங்குவேன் என்பார்கள். காலி இடம் இருந்தால் இந்த பணத்தை கொண்டு விவசாயம் பார்க்கலாம். ஆடு மாடு கோழி பண்ணை வைக்கலாம் என்பார்கள்.

செடி
இந்தப் பணத்தில் பலன் கொடுக்கும் செடிகளை வாங்கி நடலாம். எல்லாம் சரி, அப்படியே செடி வாங்க ஆசைப்பட்டாலும் யாராவது வெறும் ஒரே ஒரு செடியை ரூ 4 லட்சத்திற்கு வாங்க ஆசைப்படுவார்களா, அது முளைத்து 4 இலை விட்ட செடி... நியூஸிலாந்தில் ஒருவர் அரிதான வீட்டுச் செடியை அதுவும் வெறும் 4 இலை கொண்ட அந்த செடியை ரூ 4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

62 முறை
ஆம் அவர் ஆக்லாந்தை சேர்ந்த தாவரவியலாளர். அந்த செடியின் பெயர் ரேபிடோபோரா டெட்ராஸ்பெர்மா. இதன் இன்னொரு பெயர் ஃபிலோடென்டிரான் மினிமா அல்லது வேரிகேடட் மினிமா. இந்த செடியை டிரேட் மீ என்ற ஒரு ஏலம் நடத்தும் நிறுவனம் ஏலத்தில் விட்டது. 62 முறை இந்த செடி மீது ஏலங்கள் சென்றன.

ரூ 4 லட்சம்
கடைசியாக இந்த செடி 8,150 நியூஸிலாந்து டாலர்களுக்கு விலை போனது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 4,00,690 ஆகும். இந்த செடி மஞ்சள், பச்சை நிறம் கலந்திருக்கும். இதில் வெறும் 4 இலைகள் மட்டுமே இருக்கும். இந்த செடிகள் மிகவும் அரிதானது, வளர்வதற்கு நாளாகும் என்கிறார்கள் தோட்டக் கலை நிபுணர்கள். என்னதான் இருந்தாலும் இந்த செடிக்கு ரூ 4 லட்சம் என்பது மிகவும் அதிகம்தாங்க!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications