For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள் பயண வீடியோ

    நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

    இவர்கள் மூவரும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.

    இன்று இரவு எல்லோரும் தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி தலைமையிடத்திற்கு செல்வார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்து விவாதம் நடத்தப்படும்.

    சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன்

    விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் செய்யப்படும். தொடர்ந்து பல மாதங்களாக தங்கி அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்டு.

    மூன்று நாட்டை சேர்ந்தவர்கள்

    தற்போது மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 5 மாதமாக விண்வெளி உள்ள ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

    யார் இவர்கள்

    ரஷ்யாவை சேர்ந்த ஆண்டன் ஷாக்கப்பெர்லோவ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் டிங்கில், ஜப்பானை சேர்ந்த நொர்ஷிக் கனாய் ஆகியோர் தற்போது ஆராய்ச்சி முடித்து திரும்பியுள்ளனர். 5 மாதம் விண்வெளியில் இருந்ததால் இவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால் இவர்கள் தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.

    எப்படி வந்தனர்

    இவர்கள் பூமிக்கு திரும்பி வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கஜகஸ்தான் பாலைவன பகுதியில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். தனிதனி கேப்ஸ்யூல் மூலம் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். பூமியை நெருங்கும் போது ராட்சச பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.

    English summary
    Viral video of How 3 Astronauts return from Internetional space station after 5 long months of research.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X