தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- சதம் அடித்தார் கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் கேப்டவுனில் நடைபெற்றும் வரும் இந்தியா- தென்னாபிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி சதத்தை கடந்து 160 ரன்களை எடுத்தார்.

ஏற்கெனவே நடைபெற்ற டெஸ்ட் மேட்ச்களில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது.

Virat Kohli takes one century in ODI against South Africa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் களமிறங்கிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதத்தை கடந்தார். அவர் 159 பந்துகளில் 160 ரன்களை குவித்தார். 12 பவுண்டரிகளையும், இரு சிக்ஸர்களையும் விளாசினார்.

விராத் கோஹ்லி இதுவரை விளையாடியுள்ள ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ள சதத்தில் இது 34-ஆவது சதமாகும். இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு303 ரன்களை எடுத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian captain Virat Kohli takes one century in ODI against South Africa.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற