
2 டைப் கேன்சர், நரம்பியல் பாதிப்பு, 10 கிலோ வெயிட் லாஸ்! அதிபர் மாளிகையிலேயே சுருண்டு விழுந்த புதின்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் பகீர் அளிப்பதாகவே உள்ளது. இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்புப் படையில் பணிபுரியும் அதிகாரி புதின் உடல்நிலை குறித்து சில பரபர கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்
ரஷ்ய அதிபர் புதின் குறித்து இப்போது ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. குறிப்பாக அவரது உடல்நிலை சார்ந்து வரும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது.
அவர் உடல்நிலை பாதிப்புகளாகத் தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறி வருகின்றனர். பல சர்வதேச வல்லுநர்களும் கூட ரஷ்ய அதிபர் புதினுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உபியில் திருவள்ளுவர் சிலை.. தடுக்கும் பாஜக! அப்ப காசி-தமிழ் சங்கமம்? பாயிண்டை பிடித்த செந்தில்குமார்

புதின்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே புதினுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது போல.! உலக அரங்கில் ரஷ்யா கிட்டதட்ட தனித்துவிடப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. உக்ரைன் போரிலும் கூட ரஷ்யாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு தான். உலகிலேயே வலிமையான ராணுவங்களில் ஒன்று எனச் சொல்லிக் கொள்ளும் ரஷ்யாவால் போரில் வெல்ல முடியவில்லை. பல மாதங்களாக அங்குப் போர் முடியாமல் தொடர்ந்து வருகிறது. போரின் தொடக்கக் காலத்தில் கைப்பற்றிய இடங்களையும் கூட ரஷ்யா வரிசையாக இழந்து வருகிறது.

சர்வதேச அரங்கு
உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் கூட தடைகள் பெரியளவில் இருக்காது என்றே புதின் நினைத்தார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளால் ரஷ்ய எனர்ஜியை வாங்காமல் இருக்க முடியாது என அவர் நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது நேர்மாறாக போய்விட்டது. உலகின் பல நாடுகளும் ரஷ்யாவுடன் வணிகம் செய்வதில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா என்ர்ஜியை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் புதினுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் தான் இப்படி என்றார் தனிப்பட்ட வாழ்க்கையும் புதினுக்கு சிக்கல் மேல் சிக்கல் தான்.

நரம்பியல் பிரச்சினை
புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருவதாகத் தொடர்ச்சியாகத் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையே அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருகிறது. பார்கின்சன் என்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு வகை நோயாகும். நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் உடலின் பாகங்களையும் இது பாதிக்கும். முதலில் கை, கால்கள் நடுக்கத்துடன் சாதாரணமாகத் தொடங்கும் இந்த பாதிப்பு ஒரு கட்டத்தில் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழப்பிற்கும் வழிவகுக்கும்

மனச்சிதைவு
புதினுக்கு மனச்சிதைவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகச் சர்வதேச அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, புதினுக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே ரஷ்யா பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் முக்கிய அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மெயில் மூலம் ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை சார்ந்த தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் புதின் உடல்நிலை மோசமாக உள்ளதை உறுதி செய்துள்ளார்.

2 வகையான கேன்சர்
அவர் அனுப்பிய மெயில் கூறப்பட்டுள்ளதாவது: புதினுக்கு நரம்பியல் நோயான பார்கின்சன் நோய் ஆரம்ப நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வலியைக் கட்டுப்படுத்த அவருக்கு அதிகப்படியான ஸ்டீராய்டுகள், வலி நிவாரணிகள் தரப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே கணைய புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சையும் மருந்துகளும் கூட தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்குக் கணைய புற்றுநோயுடன், புரோஸ்டேட் கேன்சர் இருப்பதும் தெரிய வந்துள்ளது என்று அந்த பாதுகாப்புப் படை அதிகாரி தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

10 கிலோ எடை இழப்பு
சில நாட்களுக்கு முன்பு தான், ரஷ்ய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடும் முக்கியமான டெலிகிராம் சேனல் புதின் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறியது. ரஷ்ய பாதுகாப்புப் படை அதிகாரியும் அதை உறுதி செய்யும் விதமாக மெயில் அனுப்பியுள்ளார். மோசமான நோய்கள், தொடர் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் புதின் சுமார் 10 கிலோ வரை உடல் எடையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய அதிபருக்குக் கடுமையான இருமலும் இருந்து வருகிறது. சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் புதின் மீட்டிங் ஒன்றை நடத்தியிருந்தார். மீட்டிங் சமயத்திலேயே புதினுக்கு கடுமையான இருமல் இருந்துள்ளது. மீட்டிங் முடிந்த பிறகு, புதினுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் அளவுக்கு உடல்நிலை பாதிப்பு மோசமாகி உள்ளது.

அடுத்தடுத்து சம்பங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிபர் மாளிகையில் புதின் திடீரென தடுமாறி படிக்கட்டுகளில் இருந்து விழுந்ததாகவும் இதில் அவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. புதின், ஐந்து படிகள் உருண்டு வந்து கீழே விழுந்ததாகவும் அருகில் இருந்த பாதுகாவலர்கள் உதவித்தான் புதினால் நிற்கவே முடிந்தது என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்கு விரைந்து சென்ற மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். அதேபோல சில வாரங்களுக்கு முன்பு புதின் கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் சந்தித்த போது, அவரது கைகள் நீல நிறத்தில் மாறி இருந்தது. மேலும், தீவிர சிகிச்சையின் போது, நேரடியாக நரம்பிற்கு மருந்துகளை அளிக்கும் IV முறையால் ஏற்பட்ட டிராக் மார்க் காயங்களும் புதின் கைகளிலிருந்தது குறிப்பிடத்தக்கது.