For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014ம் ஆண்டில் உபயோகிக்கப் பட்ட மோசமான பாஸ்வேர்டு... 123456 !

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: 2014 ஆம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு-123456 என அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் லாஸ் கேட்டோஸ் என்ற பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம் ஒன்று, கடந்த ஆண்டு ஆன்லைனில் திருடப்பட்டு, கசிந்த மில்லியன் கணக்கான பாஸ்வேர்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில் மோசமான பாஸ்வேர்டுகள் என பட்டியல் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த பாஸ்வேர்டு...

முதலிடம் பிடித்த பாஸ்வேர்டு...

அதன்படி, 123456 என்ற பாஸ்வேர்டு அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 12345 மற்றும் 12345678 போன்ற பாஸ்வேர்டுகள் இடம் பிடித்துள்ளன.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியது...

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியது...

இதே போல் monkey, qwerty, football, abc123, batman, 123123, 111111, superman, jennifer போன்றவையும் பாஸ்வேர்டாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நினைவில் நிற்கும் பெயர்கள்...

நினைவில் நிற்கும் பெயர்கள்...

இ-மெயில், ஏடிஎம், உட்பட பல சேவைகளுக்காக பாஸ்வேர்டை பயன்படுத்துவதால் பலரும் எளிதில் நினைவிருக்கும் பெயர்களையே வைக்கிறார்கள். எனவே, இதனை எளிதாக மற்றவர்கள் ஹேக் செய்து விடுகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எளிதாக யூகிக்க வாய்ப்பு...

எளிதாக யூகிக்க வாய்ப்பு...

மேலும், உங்களுக்கு பிடித்த விளையாட்டு, பிறந்த தேதி, பிடித்த பிரபலங்களின் பெயர்கள், தட்டச்சு செய்வதற்கு எளிமையான சொற்களை பாஸ்வேர்டாக உபயோகிக்க வேண்டாம். இதையும் மற்றவர்கள் எளிதாக யூகிக்க வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

எண்ணும், எழுத்தும் கலந்தது...

எண்ணும், எழுத்தும் கலந்தது...

எனவே, இவ்வாறு எளிய வார்த்தைகள் மற்றும் எண்களை பாஸ்வேர்டாக வைப்பதற்கு பதிலாக, எண் மற்றும் எழுத்தால் இணைந்த பாஸ்வேர்டுகளை உபயோகப்படுத்தலாம் என ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. மேலும், பாஸ்வேர்டு வைப்பதும் ஒரு கலை தான் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஹேக்கர்கள்...

ஹேக்கர்கள்...

வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டினர் பயன்படுத்திய பாஸ்வேர்டுகளை கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வலைத்தளங்கள் மற்றும் பெருநிறுவன நெட்வொர்க்குகள் மீதான தாக்குதல்களின் போது அவற்றை திருடும் ஹேக்கர்கள் பாஸ்வேர்ட் போன்ற முக்கிய தரவுகளை ஆன்லைனில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
The password 123456 has been named as the worst password of 2014 by online security firm SplashData, and it’s joined in the top 10 by 12345, 12345678, 123456789 and 1234.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X