For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இந்தியாவை பாருங்க.. திறமை கொட்டிகடக்குது!" பாராட்டி தள்ளிய புதின்.. நோட் செய்யும் உலக நாடுகள்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இந்தியர்கள் பாராட்டித் தள்ளிப் பேசியுள்ள பேச்சு தான் சர்வதேச நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு என்பது பல ஆண்டுகளாகத் தொடரும் ஒன்று. இதன் காரணமாகவே இந்திய பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவின் ஆயுதங்களே அதிகமாக இருக்கும்.

அமெரிக்கா பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சமயத்திலும் கூட எப்போதும் ரஷ்யா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளன. இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.

மிக பெரிய சிக்கலில் ரிஷி சுனக்! ரஷ்யா கைகளில் டாப் சீக்ரெட்.. காரணம் லிஸ் டிரஸ்! அதிர வைக்கும் தகவல்மிக பெரிய சிக்கலில் ரிஷி சுனக்! ரஷ்யா கைகளில் டாப் சீக்ரெட்.. காரணம் லிஸ் டிரஸ்! அதிர வைக்கும் தகவல்

 இந்தியா ரஷ்யா

இந்தியா ரஷ்யா

கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு அதை ரத்து செய்தது. இதன் காரணமாகவே உக்ரைன் போரில் இந்தியா நடுநிலையான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இதனிடையே இந்தியர்களை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பாராட்டிப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பாராட்டு

பாராட்டு

இந்தியர்களைத் திறமையானவர்கள் என்று அழைத்த புதின், இந்தியர்களின் திறமையானவர்கள் இந்தியாவின் வளர்ச்சியின் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் கூறினார். ரஷ்யாவின் ஒற்றுமை தினம் நவ.4இல் கொண்டாடப்படும் நிலையில், விளாடிமர் புதின் பேசுகையில், "இந்தியாவுக்கு அதிக திறன் உள்ளது என்று பாராட்டினார். இந்தியா சிறப்பான வளர்ச்சியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 திறமையானவர்கள்

திறமையானவர்கள்

150 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு அனைத்தும் சாத்தியம் தான். நாட்டின் வளர்ச்சியாகவே இந்தியர்கள் பெரிதும் உழைக்கிறார்கள். இந்தியா வளர்ச்சியில் நிச்சயமாகச் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. அங்குள்ள மக்கள் தொகையே இந்தியாவுக்கு மிகப் பெரிய பிளஸ். இது நிச்சயம் அனைவருக்குமே தெரியும். அதேநேரம் கடந்த காலத்தில் நடந்த காலனித்துவ ஆட்சியை நம்மால் மறுக்க முடியாது" என்றார்.

 ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா

தொடர்ந்து காலனித்துவ ஆட்சி குறித்துப் பேசிய அவர், "செழிப்பான ஆப்பிரிக்கா காலனித்துவ நாடுகளால் கொள்ளை அடிக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். ஏன் ஐரோப்பாவில் உள்ள ஆய்வாளர்கள் கூட இதை மறைக்கவில்லை. ஆப்பிரிக்க மக்களின் துக்கம் மற்றும் துன்பத்தால் பல விஷயங்களைக் காலனித்துவ நாடுகள் செய்தன. அனைத்தும் இப்படித்தான் கட்டப்பட்டன என நான் சொல்லவில்லை.

 அடிமை கலாசாரம்

அடிமை கலாசாரம்

ஆனால் பெரும்பாலான விஷயங்கள் இப்படித்தான் கட்டப்பட்டன என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. கொள்ளை, அடிமை வியாபாரம் அப்போது இருந்ததை யாராலும் மறுக்க முடியாது" என்று குறிப்பிட்டார். அடுத்து ரஷ்யாவின் காலசாராம் எப்படிப்பட்டது, ரஷ்ய கலாசாரத்தில் ஐரோப்பிய கலாசாராத்தின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதையெல்லாம் அவர் விரிவாக விளக்கிப் பேசினார்.

 ரஷ்ய கலாசாரம்

ரஷ்ய கலாசாரம்

அதாவது, "ரஷ்யாவில் சில பகுதிகளில் கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பாவின் கலாசாரம் இருக்கவே செய்கிறது. ரஷ்யா ஒரு ஒருங்கிணைந்த பெரிய உலக வல்லரசாக உருவானதற்குக் காரணமே இதுதான். எங்கள் நாட்டின் தனித்துவம் இதில் தான் உள்ளது. பல தரப்பட்ட கலாசாரத்தை உள்ளடக்கி நாங்கள் உள்ளோம். இது உண்மையிலேயே ஒரு தனித்துவமான நாகரிகம் மற்றும் தனித்துவமான கலாச்சாரம்" என்று அவர் தெரிவித்தார்.

 உலக நாடுகள்

உலக நாடுகள்


இந்தியா கடந்த சில காலமாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட புதினிடம் இது போருக்கான நேரம் இல்லை என்று கூறி இருந்தார். இதையெல்லாம் வைத்து இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட விரும்பவில்லை எனச் சிலர் கூறும் நிலையில், புதினின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக ஐரோப்பாவையும் அவர் மறைமுகமாகச் சாடியுள்ள நிலையில், உலக நாடுகளும் கூட புதின் பேச்சை முக்கியமாகவே பார்க்கிறது.

English summary
What Russia President Putin says about India in his Russia Unity Day Russian President Vladimir Putin praised Indians and India's growth: Vladimir Putin says Indians are talented and will achieve outstanding results for nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X