ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஏ.2 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு.. ஹூ எச்சரிக்கை!
ஜெனீவா: ஒமிக்ரான் வைரசின் பிஏ.2 வேரியண்ட் ஆபத்தான வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் டெல்டா வைரஸ் அளவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
தற்போது ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரான்
ஒமிக்ரான் வைரசின் 'பிஏ.2' என்ற புதிய வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேரியண்ட், ஏற்கனவே உள்ள ஒமிக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

தடுப்பூசி
பி.ஏ.2. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய வேரியண்ட் அதிகம் பாதிக்கும். பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும் என்று கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிலையம்
பிஏ 2 ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து உலக சுகாதார நிலையத்தின் இயக்குனர் கூறுகையில், ''ஒமிக்ரான் வேறுபாட்டின் நான்கு வைரஸ்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. அதில் பிஏ2 வைரஸும் ஒன்று. பிஏ1 வைரஸை விட பிஏ2 வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரியவந்துள்ளது'' என்கிறார்.

ஆபத்தான வைரஸ்
உலக சுகாதார நிலையத்தின் கொரோனா பிரிவு தலைவர் மரியா வான் கூறும்போது, ''ஒமிக்ரான் உலக அளவில் அதிகமாக பரவி வருகிறது. இப்போது பாதிப்பு அளவு குறைவாக இருந்தாலும், போகப்போக அதன் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. டெல்டா வைரஸை விட குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தினாலும், இது முதல் அலையில் பாதிப்பை ஏற்படுத்திய வைரசை போல ஆபத்தான வைரஸ்தான். தனி மனித இடைவெளி, மாஸ்க், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications