For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியும் மக்களா.. 6 கோடி பேர்.. தினமும் 5 லிட்டர்! கோக கோலாதான் "கடவுள்!" தீர்த்தமே அதுதான்

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: தினமும் 3-5 லிட்டர் கோக கோலா குடிப்பது.. அதை கடவுளாக வணங்குவது.. கோவில்களில் தீர்த்தமாக கொடுப்பது என்று வினோத பழக்கத்தை மெக்சிகோவில் மக்கள் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். அங்கு அப்படி என்ன நடக்கிறது.. மக்கள் கோக கோலாவிற்கு அடிமை ஆனது எப்படி?

தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு டீ கடையை பார்த்து விட முடியும். எவ்வளவு வெயிலிலும் தமிழ்நாட்டில் டீ கடை இருக்கும்.

அலுவலக விஷயங்கள் தொடங்கி காதல் விஷயங்கள் வரை அனைத்தையும் ஒரு "டீ போட்டுக்கிட்டே" பேசலாம் என்பதுதான் தமிழர்களின் சொல்லப்படாத கலாச்சாரம். ஆனால் தமிழர்கள் டீக்கு அடிமையா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 கோக கோலா

கோக கோலா

டீ இல்லாமலும் தமிழர்களால் இருந்துவிட முடியும்.. ஆனால் கோக கோலா குடிக்காமல் மெக்சிகோ நாட்டு மக்களால் இருக்க முடியாது. நாம் டீ குடிப்பதை விட பல மடங்கு அதிகமாக இவர்கள் கோக கோலா குடிக்கிறார்கள். எதோ ஒரு பாட்டில் தினமும் குடிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒரு நாளுக்கு அவர்கள் 3-4 லிட்டர் வரை கோக கோலா குடிக்கிறார்கள். முக்கியமாக மெக்சிகோவின் தெற்கு மூலையில் இருக்கும் சியாபாஸ் நகரத்தில் தினமும் சிலர் 5 லிட்டர் கூட கோக கோலா குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

காலையில் இருந்து தண்ணீர் போல

காலையில் இருந்து தண்ணீர் போல

காலையில் தண்ணீர் குடிப்பது போல இவர்கள் கோக கோலா குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நாடு முழுக்க கோக கோலா விளம்பரம், கோக கோலா புகைப்படங்கள்தான் மெக்சிகோவில் நிரம்பிக்கிடக்கிறது. அதிலும் சியாபாஸ் நகரத்தில் மட்டும் தினமும் ஒருவர் சராசரியாக 5 லிட்டர் வரை கோக கோலா குடிக்கிறார். உலகில் மற்ற நாடுகளில் குடிப்பதை விட அதிக கோக கோலா இந்த ஒரு நகரத்தில் குடிக்கப்படுகிறது.

 தண்ணீர் கூட இல்லை

தண்ணீர் கூட இல்லை

சராசரியாக ஒரு ஆள் ஒருவருடத்திற்கு 1600 லிட்டர் வரை கோக கோலா குடிக்கிறார்கள். இது அவர்கள் குடிக்கும் தண்ணீர் அளவை விட அதிகம். அங்கு கோக கோலா தண்ணீரை விட விலை குறைவு. அமெரிக்க டாலருக்கு வெறும் 30 சென்ட் மட்டுமே கோக கோலா விற்பனை ஆகிறது. அங்கு மக்கள் காலையில் தொடங்கி இரவு வரை உணவிற்கும், இடைப்பட்ட நேரத்திலும் கோக கோலா குடிப்பதையே வழக்கமாக வைத்து உள்ளனர். விவசாய வேலை பார்ப்பவர்கள் கூட கோக கோலாதான் குடிக்கிறார்கள்.

எவ்வளவு குடிக்கிறார்கள்

எவ்வளவு குடிக்கிறார்கள்

வீட்டிற்கு குடிநீர் வசதி எடுக்காதவர்கள் கூட கோக கோலாவை பிரிட்ஜில் நிரப்பி வைத்து உள்ளனர். அங்கு இருக்கும் டோஸியோ என்ற பழங்குடி மக்கள் இடையே கோக கோலா கடவுளாக வணங்கப்படுகிறது. இவர்கள் கோக கோலாவை வைத்து பல இடங்களில் பூஜை செய்கிறார்கள். அதை தீர்த்தமாக கொடுக்கிறார்கள். கோக கோலா எங்களை காக்கிறது. எங்களுக்கு நோய் வராமல் தடுக்கிறது. நாங்கள் அதனால் அதை வணங்குகிறோம் என்று அந்த பழங்குடி மக்கள் கூறுகிறார்கள். நோய்க்கு மருந்தாக கோலா கொடுக்கிறார்கள்.

சுகர் பிரச்சனை

சுகர் பிரச்சனை

கிட்டத்தட்ட 6 கோடி பேர் இதனால் அங்கு கோக கோலாவிற்கு அடிமை ஆகி உள்ளனர். அதீத கோக கோலா காரணமாக பலருக்கு அங்கு சுகர் பிரச்சனை வந்துள்ளது. பலரின் சுகர் அளவு 200mg/dL என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. அதாவது மனிதர்கள் தாங்க கூடியதை விட இரண்டு மடங்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு வருடத்திற்கு 3000 பேர் கோக கோலா காரணமாக சுகர் வந்து மரணம் அடைகிறார்கள். அந்த அளவிற்கு மோசமான நிலையை கோக கோலா அங்கு ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவில் கோக கோலா

மெக்சிகோவில் கோக கோலா

கொரோனா, விபத்து காரணமாக ஏற்படும் மரணங்களை விட இதுபோன்ற மரணம் அதிகம் ஆகும். அங்கு அரசும் கோக கோலா விளம்பரங்களை, விற்பனையை ஆதரித்து வருகிறது. இதுதான் இந்த அசுர விற்பனைக்கு காரணம் ஆகும். கடந்த 2000ம் ஆண்டில் இருந்துதான் அங்கு கோக கோலா விற்பனை அதிகம் ஆகி உள்ளது. அரசும் அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோக கோலாவை தீவிரமாக ஆதரித்தது. 2000க்கு முன் மெக்சிகோவில் கோக கோலா இயக்குனராக இருந்த விசெட் பாக்ஸ்தான் அங்கு 2000ம் ஆண்டில் அதிபர் ஆனார்.

 கோக கோலா அதிபர்

கோக கோலா அதிபர்

கோக கோலா விற்பனையை உச்சம் கொண்டு சென்றதற்கு இவரும் ஒரு காரணம் என்ற புகார் உள்ளது. இவர்தான் மறைமுகமாக கோக கோலா விற்பனையை உயர்த்தி மக்களை அடிமை ஆக செய்தார் என்ற புகாரும் உள்ளது. ஆனால் இதெல்லாம் நிரூபிக்கப்படவில்லை. ஒரு நாளுக்கு சிறுவர்கள் கூட அங்கு 3 லிட்டர் கோக கோலா குடிக்கும் அவலம் உள்ளது... ஒரு நாட்டில் கிட்டத்தட்ட 6 கோடி பேர் இப்படி கோக கோலாவிற்கு அடிமையாகி இருப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Why Coke is so important in Mexico? Why people treat the drink as their god? Why Coke is so important in Mexico? Why people treat the drink as their god? தினமும் 3-5 லிட்டர் கோக கோலா குடிப்பது.. அதை கடவுளாக வணங்குவது.. கோவில்களில் தீர்த்தமாக கொடுப்பது என்று வினோத பழக்கத்தை மெக்சிகோவில் மக்கள் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். அங்கு அப்படி என்ன நடக்கிறது.. மக்கள் கோக கோலாவிற்கு அடிமை ஆனது எப்படி?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X