என்ன நடந்தாலும் சரி! நேரம் பார்த்து பாக் பற்றி சீனா அடித்த கமெண்ட்! இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல்?
இஸ்லாமாபாத்: உக்ரைன் போர் நடந்துவரும் நிலையில் பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Recommended Video
பாகிஸ்தானில் தற்போது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக 48வது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பாக சீனா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளது.
இது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகும். சீனா சார்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ கலந்துகொண்டார்.

என்ன பேசினார்?
முதல்முறையாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் சீனா கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷியுடன் வாங்க் இ தனியாக ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பிற்கு பின் இரண்டு நாடுகள் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில்தான் பாகிஸ்தானுக்கு அனைத்து விஷயங்களிலும் முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்று வாங்க் இ தெரிவித்து இருக்கிறார்.

சீனா ஆதரவு
அதில், சீனாவிற்கு பாகிஸ்தான் வலிமையான, உறுதியான ஆதரவை கொடுக்கும். சர்வதேச அளவில் என்ன நடந்தாலும் சரி. இல்லை சீனாவின் உள்நாட்டு அரசியலிலோ அல்லது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலிலோ என்ன நடந்தாலும் சரி, கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானுடனான நட்பை சீனா பாதுகாக்கும்.

பாகிஸ்தான் சீனா உறவு
பாகிஸ்தானின் இறையாண்மையை காக்கவும், அவர்களின் எல்லைகளை காக்கவும் சீனா உறுதுணையாக இருக்கும். என்ன நடந்தாலும் சரி, என்ன மாறினாலும் சரி, சீனாவின் உதவி தொடரும். இரண்டு நாடுகள் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் இருநாட்டு உறவு, சர்வதேச பிரச்சனைகள், உக்ரைன் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. விரிவான மீட்டிங் இதில் நடத்தப்பட்டது என்று சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பாராட்டிய மறுநாளே '
இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டிய மறுநாளே சீனா இப்படி தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மக்களுக்கான கொள்கை. குவாட் நாடுகள் எதிர்க்கும் என்று அஞ்சாமல் இந்தியா செயல்படுகிறது. அமெரிக்கா பற்றி அஞ்சாமல் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது, இந்தியாவின் முடிவுகளில் அந்த நாட்டு ராணுவ தலையீடு இல்லை. இந்தியாவை நான் வணங்குகிறேன், என்று குறிப்பிட்டார்.

காஷ்மீர் பிரச்சனை
இந்தியாவை பாகிஸ்தான் பாராட்டிய நிலையில்தான் பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று சீனா தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை தொடர்ந்து தைவான் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை என்று பல்வேறு எல்லை பிரச்சனைகள் கவனம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாகிஸ்தானுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக சீனா திரியை கிள்ளி போட்டுள்ளது. காஷ்மீர் பிரச்னையை மனதில் வைத்து சீனா இப்படி பேசி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications