For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 வருடத்திற்கு முன் கணவனை சுட்டுக் கொன்ற 75 வயது பாட்டிக்கு ஆயுள் தண்டனை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஒருவருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாக கணவனை சுட்டுக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1975 ஆம் ஆண்டு செய்யேன் பகுதியில் வசித்துவந்த போது தனது 25 வயது கணவனை சுட்டுக் கொன்றுவிட்டார் அம்மூதாட்டி.

பின்னர், அட்டை பெட்டியில் பிரேதத்தை கிடத்தி ஒரு சுரங்கத்தின் அருகே வீசி விட்டு ஏதும் தெரியாதவர் போல் இருந்து விட்டுள்ளார்.

75 வயதனா அலைஸ்:

இந்த வழக்கில் மோப்பம் பிடித்துவிட்ட அமெரிக்க போலீசார் தற்போது 75 வயதாகும் அலைஸ் என்ற மூதாட்டியை கைது செய்து வ்யோமிங் மாநில கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மகளைக் கொல்ல முயற்சி:

வீட்டில் அழுதுக் கொண்டிருந்த 2 வயது மகளை கொல்வதற்காக கணவன் பாய்ந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அந்த கொலையை செய்து விட்டேன் என்று அவர் அளித்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் தயாராக இல்லை.

நான்காவது கணவருடன் வாழ்க்கை:

தற்போது நான்காவது கணவரான உடென் என்பவருடன் அலெஸ் வாழ்ந்து வருகிறார்.

அவரும் அப்படித்தான்:

இந்த உடென் தனது முதல் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற வழக்கை சந்தித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் தண்டனை தீர்ப்பு:

போதுமான சாட்சியங்களுடன் குற்றம் நிரூபணம் ஆனதால் அலெஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

English summary
A judge in Wyoming sentenced a 75-year-old Missouri woman to life in prison on Monday for killing her husband with a rifle in the mid-1970s and throwing his body down the shaft of an abandoned gold mine, where it remained for nearly 40 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X