உலகின் டேஞ்சரஸ் ஸ்னைப்பர்.. உக்ரைன் படையுடன் இணைந்த "வாலி.." 6 ரஷ்ய வீரர்களை சுட்டு வீழ்த்தி ஆவேசம்
கீவ்: உலகின் மிகவும் அசாத்திய துப்பாக்கிச்சூடும் திறமை கொண்ட ‛ஸ்னைப்பர் வாலி' (sniper Wali) உக்ரைனுடன் கைகோர்த்துள்ளார். இவர் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தாக்குதல் குறைந்திருந்த நிலையில் இன்று முதல் அதிகரிக்க துவங்கியது. கீவ் நகரை ரஷ்யாவின் ஏவுகணைகள், குண்டுகள் மீண்டும் தாக்குகின்றன.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. மேலும் இந்த போரில் அணுஆயுதம், உயிரி ஆயுதம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மறுத்துள்ளன.

உதவி கோரும் உக்ரைன்
ரஷ்யாவின் ராணுவத்தை ஒப்பிடும்போது உக்ரைனின் ராணுவம் சிறியது. இதனால் உக்ரைனுக்கு உதவி செய்யும்படி அதன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பி நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் செய்து வருகின்றன.

‛ஸ்னைப்பர் வாலி’
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ராயல் கனடியன் 22வது படைப்பிரிவின் முன்னாள் வீரர் ‛ ஸ்னைப்பர் வாலி' களமிறங்கி உள்ளார். துப்பாக்கி சுடுதலில் கைதேர்ந்த இவர் ஏற்கனவே 6 ரஷ்ய வீரர்களை சுட்டு கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இவர் அளித்த பேட்டியில், "நான் உக்ரைனுக்கு உதவ விரும்புகிறேன். ஐரோப்பியாவுடன் உக்ரைன் அதிபர் நெருக்கம் காட்டுகிறார் என்ற காரணத்துக்காக அவர்கள் மீது ரஷ்யா குண்டுவீசுகிறது. இது நடக்க கூடாது'' என்றார்.

யார் இவர்
கனடாவை சேர்ந்த இவருக்கு வயது 40. பிரான்ஸ்-கனடா கணினி விஞ்ஞானியான இவர் புரோகிராமராக பணியாற்றினார். மேலும் கனடாவின் ராயல் கனடியன் 22வது படைப்பிரிவில் துப்பாக்கி சுடும் வீரராக இருந்தார். இவர் 2009, 2011 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றார். அப்போது அவர் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு எதிரிகளை கொன்று குவித்தார்.

பெயர் காரணம்
இதையடுத்து அவருக்கு வாலி (WALI) என பெயரிடப்பட்டது. இது அரபிக் மொழியில் காப்பாளர் என பொருள்படும். இவர் தான் தற்போது உலகில் அதிமோசமான அதேநேரத்தில் மிகமிக சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக உள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் தவிர சிரியா, ஈராக் போரிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

திறமை என்ன
2017 ல் ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதியை இவர் 3,450 மீட்டர் தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தினார். இவரால் ஒரு நாளில் 40 பேரை வீழ்த்த முடியுமாம். ஒரு நல்ல துப்பாக்கி சுடும் வீரரால் போர் களத்தில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 பேரையும், சிறந்த துப்பாக்கி சூடும் வீரரால் 7 முதல் 10 பேரை மட்டுமே சுட முடியும். ஆனால் வாலியின் நேர்த்தி அதை விட அதிகமாக உள்ளது. இத்தகைய திறமை கொண்ட ‛ஸ்னைப்பர் வாலி' தான் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் போரிடுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications