For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக...: குவைத்தில் புதிய சாதனை படைத்த வெயில்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: உலக வரலாற்றிலேயே முதல் முறையாக குவைத்தில் அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.

வெயில் காலம் வந்தால் அதுவும் கத்திரி வெயில் காலம் வந்தால் தமிழக மக்கள் அஸ்ஸு, உஸ்ஸு என்று வெயிலை தாங்க முடியாமல் துடிப்பார்கள். அதிலும் இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சென்ச்சுரி அடித்து மக்களை கிளீன் போல்ட்டாக்கிவிட்டது.

இந்நிலையில் தான் தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

குவைத்

குவைத்

உலக வரலாற்றிலேயே குவைத்தில் அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமை 54 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதாவது 129.3பஹ்ரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் தான் இப்படி வெயில் கொளுத்தியிருக்கிறது.

வெயில்

வெயில்

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் குவைத்தில் வெயில் புதிய சாதனை படைத்து மக்களை களைப்படைய வைத்துள்ளது.

ஈராக்

ஈராக்

குவைத்தில் வெயில் கொளுத்திய அன்று அண்டை நாடான ஈராக்கிலும் சூரியன் உக்கிரமாக இருந்துள்ளது. இதனால் ஈராக்கின் பஸ்ரா நகரில் கடந்த வியாழக்கிழமை வெயிலின் அளவு 53.9 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது.

கலிபோர்னியா

கலிபோர்னியா

முன்னதாக கடந்த 1913ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வெயிலின் அளவு 56.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஆனால் அந்த பதிவில் ஏதோ கோளாறு என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
World's hottest day ever is recorded in Kuwait on thursday as temperature was 54C there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X