ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம்.. ரூ.230 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு!

உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரல் ரூ.230 கோடிக்கு ஏலத்தில் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: தி ராக் என அழைக்கப்படும் மிகப் பெரிய வெள்ளை நிற வைரம் ஒன்று, ஜெனிவாவில் நடைபெறும் ஏலத்தில் இதுவரை இல்லாத பெரிய தொகையாக, ரூ. 230 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரங்கள் எப்போதுமே மதிப்பு மிக்கவைகளாகவே கருதப்படுகிறது. சாதாரண வைரங்களுக்கே மதிப்பு அதிகம் என்றால், அரிய வகை வைரங்களைப் பற்றி கேட்கவா வேண்டும். அப்படிப்பட்ட வைரக் கல் ஒன்று அடுத்த வாரம் ஜெனீவாவில் ஏலத்திற்கு வருகிறது. இந்த வைரக்கல்லானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய தொகைக்கு ஏலம் போகும் என இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.

இது கிறிஸ்டி விற்பனையின் (Sale by Christie) ஒரு பகுதி ஆகும். இதில் ஒவ்வொன்றும் 200 காரட்டுகளுக்கும் அதிகமான எடையுள்ள இரண்டு வைர கற்கள் உள்ளன. அவற்றில் 'தி ராக்' எனப்படும் பெரிய வெள்ளை வைரமானது பேரிக்காய் வடிவிலானது. 228.31 காரட் வைரமான இது, கோல்ஃப் பந்தின் அளவில் இருக்கும்.

அரிய வைரம்

அரிய வைரம்

ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டியின் ஜுவல்லரி டிபார்ட்மென்ட்டின் தலைவர் மேக்ஸ் ஃபாசெட் இந்த வைரம் பற்றி கூறுகையில், "பெரும்பாலும் இது போன்ற பெரிய வைர கற்கள், அதன் எடையைக் குறைப்பதற்காக சில வடிவங்களைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இது முற்றிலும் சமச்சீரான ஒரு பேரிக்காய் வடிவில் உள்ளது. ஏலத்தில் விற்கப்படும் அரிதான ரத்தினங்களில் இதுவும் ஒன்றாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஏலம்

ஏலம்

இந்த தி ராக் வைரமானது தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்டது. இதன் முன்னாள் உரிமையாளர் கார்டியர் இதனை நெக்லஸாக அணிந்து இருந்தார். தற்போது ஏலதாரரின் கூற்றுப்படி இந்த வைரம் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 230 கோடி ஆகும்.

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம்

தி ராக் தவிர 205.07 காரட் யெல்லோ, குஷன் வடிவிலான "தி ரெட் கிராஸ் டயமண்ட்" என்ற வைரத்தையும் கிறிஸ்டி நிறுவனம் ஏலத்தில் விடுகிறது. இந்த வைரத்தை விற்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஜெனிவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தரப்பட உள்ளது. எனவே தான் இந்த வைரத்திற்கு ரெட் கிராஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர்

சுத்தமான குடிநீர்

இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இம்முறை நடக்கும் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2017ம் ஆண்டு, 163.41 காரட் வைரம் ஒன்று இதே போல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+