For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,271,889 பேர் பலி.. 515,792,334 பேர் பாதிப்பு

கொரோனாதொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 2வது இடத்தில் உள்ளது

Google Oneindia Tamil News

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன.

இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,271,889 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 515,792,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 470,516,117 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,004,328 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மறைக்கப்பட்டதா கொரோனா மரணங்கள்? 47 லட்சம் பேர் கூடுதலாக பலி என WHO அறிக்கை இந்தியாவில் மறைக்கப்பட்டதா கொரோனா மரணங்கள்? 47 லட்சம் பேர் கூடுதலாக பலி என WHO அறிக்கை

மருந்து

மருந்து

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 83,437,158 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 66,611 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,023,908பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 80,870,595 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பாதிப்பு

பாதிப்பு

நம் நாட்டை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,094,548 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 3,155 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 523 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,547,699 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

தொற்றின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 7 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.,

Recommended Video

    மீண்டும் ஆட்டத்தை தொடங்கியதா கொரோனா? மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு!
    முதலிடம்

    முதலிடம்

    தொற்று பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், நம் நாடும் 2-வது இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 30,524,183 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 21,682 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 663,967 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 151 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 29,609,094 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.

    English summary
    worldwide Coronavirus positive case crosses 515,792,334 and death case 6,271,889 கொரோனாதொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X