For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொசுக்கள் மட்டும் அல்ல செக்ஸ் மூலமும் பரவும் ஜிக்கா வைரஸ்: விஞ்ஞானிகள் திடுக் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் ஜிக்கா வைரஸ் பரவி வருகிறது. ஜிக்கா வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வள்ர்ச்சி பாதிப்பு அடைந்து அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். இதனால் தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Zika virus could be transmitted by sex

இந்நிலையில் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென் பசிபிக் கடலில் 118 தீவுகளை உள்ளடக்கிய பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த 44 வயது நபரின் விந்தணுவில் ஜிக்கா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலரடோவைச் சேர்ந்த விஞ்ஞானியான பிரையன் டி. ஃபாய் செனகலுக்கு சென்று வந்த பிறகு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து அவரின் மனைவியின் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது தெரிய வந்தது.

கொலரடோவை விட்டு வெளியேறாத ஃபாயின் மனைவிக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஃபாய் செனகலில் இருந்து வந்தபிறகு மனைவியுடன் உறவு கொண்டுள்ளார். அதனால் அப்படி தான் ஃபாயின் மனைவிக்கு ஜிக்கா வைரஸ் பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Scientists have found that mosquito borne Zika virus could be transmitted by sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X