ஆடி வெள்ளி..எப்பொழுதும் காப்பாய் காமாட்சி - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஆன்மீக பயணம்
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை ஆடி வெள்ளிக்கிழமை அன்று தரிசனம் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். எப்போதும் காப்பாய் காமாட்சி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபடுவார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷ் உடனான விவகாரத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் உற்சாகமாகவே பல போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சைக்கிளிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது என பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மகன்களுடன் ஐஸ்வர்யா
தனது மகன்கள் யாத்ரா, லிங்கா உடன் இணைந்திருக்கும் தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிடுவார். சில தினங்களுக்கு முன்பு மகன்களை கட்டியணைத்து கண் கலங்கிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

காமாட்சி அம்மன் கோவில்
இன்றைய தினம் ஆடி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் காப்பாய் காமாட்சி என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

இருவரும் இணைய வேண்டும்
காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கேற்றி மனம் உருகி வேண்டிக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கணவன் மனைவி இருவரும் இணைந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications