அடுத்த 2 வருடத்தில் ... முக்கியமான திட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: : மூளையை பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். தமிழகத்தில் அடுத்த இரண்டு வருடத்தில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

Recommended Video

    அடுத்த 2 வருடத்தில் ... முக்கியமான திட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேச்சு

    காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ளது. இதனால் அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம்தமிழர் கட்சி, மநீம என அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன.

    பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

     ஜல் ஜீவன் திட்டம்

    ஜல் ஜீவன் திட்டம்

    அவர் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் பாஜக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அண்ணாமலை பேசும் போது, "தமிழகத்தில் அடுத்த இரண்டு வருடத்தில் முக்கியமான திட்டம் நிறைவேற்றப்பட போகிறது. அது ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குடிநீர் பைப்பில் வரப்போகிறது. இது மத்திய அரசின் திட்டம். இந்த திட்டம் முற்றிலும் இலவசம். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத மற்ற மாவட்டங்களில் இந்த திட்டத்தில் இணைப்பு பெறுவதற்கு இரண்டாயிரம் பத்தாயிரம் என திமுகவினர் கமிஷன் வாங்குகிறார்கள். திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறதா என மக்கள் சிந்திக்க வேண்டும்.

    உரிமை தொகை

    உரிமை தொகை

    பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் தொடங்கி,கல்விக் கடன் தள்ளுபடி , சிலிண்டர் இலவசம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை... பிறகு எதற்காக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என முதல்வர் கூறுகிறார். மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த தேர்தல் வாக்குறுதியும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை.

    மோடி அரசு

    மோடி அரசு

    பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி. முத்தலாக் சட்ட திருத்தங்களை கொண்டு வந்தது . பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இஸ்லாமிய சகோதரிகளுக்காக இத்திட்டம் கொண்டு வந்தது. அதிமுக வுடன் கூட்டணியில் இருக்கிறோம். இணைந்து பரஸ்பரமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நமது கூட்டணி காங்கிரஸ் திமுக கட்சியை போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது" என்றார்.

    திரிக்கப்படுகிறது

    திரிக்கப்படுகிறது

    முன்னதாக இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் மறைந்த ராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சமீபத்தில் திருச்சியிலுள்ள அவரின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கோயில்கள் மூடுவது பற்றித் தமிழக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. விரைவில் ராமகோபாலன் விரும்பிய தமிழகமாக மலரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்திலுள்ள எம்.பி-க்கள் ஜி.எஸ்.டி பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசுகிறார்கள்" என்று விமர்சனம் செய்தார். 'வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாதவை ' என்றும் அண்ணாமலை கூறினார்.,

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+