காஞ்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார்
காஞ்சிபுரம் அத்தி வரதரை துர்கா ஸ்டாலின் தரிசித்து சென்றார்
Recommended Video
சென்னை: திமுக தலைவா் ஸ்டாலினின் மனைவி துா்க்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்று சென்றார்.
திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்.

அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். ஆனால் கூடவே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும்.
இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சிதான் திமுக என்ற பிரச்சாரத்தை பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து முன்னிலைபடுத்தி வருகின்றனர். இதற்கு ஸ்டாலின் பலமுறை விளக்கம் அளித்து விட்டார். "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபட்டார். 40 வருஷத்துக்கு ஒருமுறை நடைபெறுவது இந்த அத்தி வரதர் உற்சவம். அதனால்தான் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் இதில் கலந்து கொள்ள வருகிறார்கள்.

8ஆம் நாள், திருவிழாவில், துர்கா, தனது நெருங்கிய உறவினர்களுடன் விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்தார். வசந்த மண்டபத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின், அத்தி வரதர் சுவாமிக்கு பச்சைப் பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்றுச் சென்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications