நல்லா தான் போச்சு.. கடைசில வச்சாரே ட்விஸ்ட்.. ஈபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் அதிர்ந்துபோன மேடை!
காஞ்சிபுரம் : அதிமுக பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்றுள்ளார் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடைமொழிகளை எல்லாம் சொல்லிப் புகழ்ந்த ஈபிஎஸ் ஆதரவாளர், கடைசியில் ஓபிஎஸ் என பிளேட்டை மாற்றிப் போட்டதால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ பழனி, மன்னிப்புக் கேட்டு ஈபிஎஸ் என தனது பேச்சை மாற்றிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
அதிமுக மோதல் விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவர் ஓபிஎஸ்ஸை பொதுச் செயலாளர் எனப் பேசிய வீடியோவை ஓபிஎஸ் தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கவனம் ஈர்க்கும் ஈபிஸ் அணி
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சியில் தனது பலத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ள நிலையில், தற்போது பொதுக்கூட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது எடப்பாடி பழனிசாமி டீம்.

முன்னாள் அமைச்சர்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ பழனி ஆகியோர் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையேற்றுள்ள ஓபிஎஸ்
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ பழனி, எடப்பாடி பழனிசாமியை புகழ்வதற்காக அடைமொழிகளைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். குடிமராமத்துப் பணிகளின் நாயகன் என்றெல்லாம் புகழ்ந்த அவர், தவறுதலாக கழகத்திற்குத் தலைமையேற்றுள்ள 'ஓபிஎஸ்' எனக் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டு, ஈபிஎஸ் என்று மாற்றிப் பேசினார்.

ஓபிஎஸ் பொதுச் செயலாளரா
எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி, ஓ.பன்னீர்செல்வத்தை கழக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டுப் பேசியதால் மேடையில் இருந்தவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் உடனடியாக மாற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை ஓபிஎஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications