பர்னிச்சர் கடை அங்கிளுக்கு உன் மேல ஆசை.. அட்ஜெட்ஸ் பண்ணிக்கோ.. 16 வயது மகள் பலாத்காரம்.. தாய் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே 11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சுனிதா. இவருக்கு 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயது மகள் இருக்கிறார். சுனிதாவின் கணவர் முதுகுதண்டுவட பிரச்சினையால் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிவிட்டார்.
இதனால் குடும்பமே வறுமையில் இருந்த நிலையில் சுனிதா புதுக்கடை பகுதியில் ராஜையன் என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்காக சென்றுள்ளார். இதில் ராஜையனுக்கும் சுனிதாவும் மிகவும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுனிதாவின் 16-வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

3 மாதம் சித்ரவதை
அப்போது அவர் தன்னை ஒருவர் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் தற்போது தோழியின் வீட்டில் உள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக விசாரணையில் இறங்கிய குழந்தைகள் நல அலுவலர்கள் அந்த சிறுமியை அவரது தோழியில் வீட்டில் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர்.

பர்னிச்சர் கடை
விசாரணையில் அந்த சிறுமி கூறுகையில், எனது அம்மா வேலை பார்க்கும் பர்னிச்சர் கடை உரிமையாளர் ராஜையனுடன் நெருங்கி பழகினார். ஞாயிற்றுக்கிழமைதோறும் ராஜையன் எங்கள் வீட்டிற்கு வருவார். என் அம்மாவுடன் தனிமையில் இருப்பார். கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டிற்கு ராஜையன் வந்தார்.

வீட்டில் இல்லாத நேரத்தில்
அப்போது எனது அம்மா வீட்டில் இல்லை. ஆனால் அவர் என்னை அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இதுகுறித்து எனது தாயிடம் நான் சொன்ன போது அந்த அங்கிளுக்கு உன் மேல் ஆசை அட்ஜெஸ்ட் செய்துகோ. உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அம்மாவே சொல்லும் போது உனக்கென்ன? இந்த விஷயத்தை எல்லாம் வெளியே சொல்லாதே என்றார்.

உடந்தை
அன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் வீட்டிற்கு வரும் ராஜையன் என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். எனக்கு பிடிக்கவில்லை என கூறியும் நான் மறுத்தும் என்னை கட்டாயப்படுத்தினார். இதற்கு எனது தாயும் உடந்தை. அவரிடமும் நான் எவ்வளவோ சொல்லியும் தொடர்ந்து இதைத்தான் செய்தார்.

நரகம்
இதனால் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே எனக்கு நரகம் போல் இருக்கும். இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்தேன். இதையடுத்து எனது தோழியிடம் சொன்னேன். அவர் அறிவுறுத்தலின் பேரில்தான் குழந்தைகள் நல அலுவலர்களாகிய உங்களுக்கு போன் செய்தேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஆசாரிப்பாளையம்
இதனையடுத்து சிறுமியை மீட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனிதா சிறுமியை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பாலியல் பலாத்காரம்
புகாரின் பேரில் சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த ராஜையன் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுனிதா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல் வயதுக்கு வந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தாயே தனது பொருளாதார தேவைகளுக்காக தனது கள்ளக்காதலன் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications