கன்னியாகுமரி அருகே அருமனையில் மனைவியின் கள்ளக்காதலனுக்கு வலை விரித்த கணவன்.. கடைசியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: திருமணத்தை மீறிய உறவை விரும்புவோருக்கு நினைத்து பார்க்க முடியாத சிக்கல்களை, கணவரிடம் இருந்தும், சக குடும்ப உறுப்பினர்களிடமும் வரும். அதேபோல் ஆண்களுக்குமே, கள்ளக்காதலியை பார்க்க போகும் போது, மறக்க முடியாத அளவிற்கு பரிசுகளும் கிடைப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கள்ளக்காதலியை கரம்பிடிக்கும் ஆசையில் வந்த தொழிலாளிக்கு ஜென்மத்திற்கு மறக்க முடியாத சம்பவம் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக 3 பேரை அருமனை போலீசார் கைது செய்தனர்.
திருமணத்தை மீறிய உறவு இந்த சமூகத்தை சீரழித்து வருகிறது. கணவனை பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். அதேபோல் மனைவியை பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தாக வேண்டும்.

இருவரும் விருப்பப்பட்டு பிரிந்தால் பிரச்சனை இல்லை. ஒருவர் சேர்ந்து வாழ விரும்பினால், விவாகரத்து வாங்க முடியாது. அதுவும் கள்ளக்காதலில் சிக்கியவர்கள், கள்ளக்காதலுக்காக கணவனை தூக்கிய எறிய சட்ட உதவியை நாடத்துணிவது இல்லை.. அதேபோல் தான் ஆண்களும்.. ஆனால் இருவருமே தங்கள் துணைகளையே காலி செய்யக்கூட துணிகிறார்கள்..
அதேபோல் கள்ளக்காதலில் ஈடுபடுவோர் கணவனுக்கு தெரியாமல் சந்திக்க முயற்சிக்கிறார்கள். அப்படி சந்திக்க முயற்சித்த போது, கணவனால் காதலனுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே காரோடு பகுதியை சேர்ந்த 40 வயதாகும் சதீஷ் என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
மதுகுடிக்கும் பழக்கம்
சதீசுக்கு அந்த தொழிலாளியின் வீட்டுக்கு சென்று மதுகுடிக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. அப்போது சதீஷ், தொழிலாளியின் மனைவியிடம் பேசி பழகி உள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் உருவானது. தொழிலாளியின் மனைவி வாய்பேச முடியாதவர் ஆவார்.
மனைவியுடன் நெருக்கம்
இதற்கிடையே சதீஷ், தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருப்பதை அறிந்ததும் தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து சதீஷை வீட்டுக்கு அழைத்து மதுகுடிப்பதை அவர் நிறுத்திவிட்டார். அவருடன் பழகுவதையும் தவிர்த்தார். எனினும் சதீஷ், தொழிலாளி மனைவியை வெளியிடங்களில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தார்களாம்.
கள்ளக்காதலியை பார்க்க ஆசை
இந்த விவகாரத்தை தொழிலாளி, தனது உறவினர்களான பிரசாத், வீரமணி மற்றும் சஜி, விவேக் ஆகியோரிடம் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர்கள் சதீசுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி சதீஷை நைசாக தொடர்பு கொண்டு உன்னுடைய கள்ளக்காதலி உன்னோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார் என நைசாக பேசியுள்ளனர். மேலும் அருமனை படபச்சை பகுதிக்கு வந்தால், கள்ளக்காதலி வருவார் என ஆசைவார்த்தையை அள்ளி வீசியுள்ளனர்.
நம்பி சென்ற கள்ளக்காதலன்
இதனை நம்பிய சதீஷ் நண்பர்கள் சிலருடன் அங்கு சென்றிருக்கிறார். கள்ளக்காதலியை கரம் பிடிக்க போகிறோம் என்ற ஆசையில் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரசாத் உள்பட 4 பேரும் கும்பலாக சேர்ந்து சதீஷை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். உனக்கு அடுத்தவன் மனைவி கேட்குதோ? என கூறி மோசமாக தாக்கியதுடன், சாலையோரம் தூக்கி வீசி விட்டு தப்பினர்.
சதீஷ் காயம்
அதே சமயத்தில் சதீஷ் மீதான தாக்குதலை பார்த்து பயந்து ஓடிய நண்பர்களில் ஒருவர் அருமனை போலீசில் நடந்தவற்றை கூறியிருக்கிறார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத், வீரமணி, சஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர். விவேக்கை தேடிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications