காரைக்காலில் ஒரே மகிழ்ச்சி.. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குஷி.. கலெக்டர் சொன்ன இன்ப அதிர்ச்சி
கன்னியாகுமரி: சிவராத்திரியை முன்னிட்டு, காரைக்காலில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி நேற்று கோலாகலமாக தொடங்கியது.. சக்தியை வழிபட நவராத்திரி என்ற ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்ற தினம், மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எனவே, இதுபோன்ற சிவராத்திரி நாட்களின்போது, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது..
சிறப்பு பூஜைகள்: அந்தவகையில் நேற்று அதாவது 8ம் தேதி மாலை 6 மணி தொடங்கி இன்று 9ம் தேதி காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியமானதாக உள்ளது.. விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும். சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்தவகையில், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது விடுமுறையாக அறிவித்துவிட்டன.. இதனால், இந்த மாநிலங்களில், பள்ளிக் கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன..
விடுமுறை : இன்று இரண்டாவது சனிக்கிழமையும் அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் வருவதால், மார்ச் 2024, மாதம் 8ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இம்மாநிலங்களில் விடுமுறை கிடைத்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டிருந்தார். நேற்றைய தினம் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024 மார்ச் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
கருவூலங்கள்: அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் கலெக்டர் அறிவித்திருந்தார்.
அதுபோலவே, காரைக்காலிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், மகா சிவராத்திரியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இன்று (9ம்தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. மக்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications