கன்னியாகுமரி கால்வாயில் 6 அடி மலைப்பாம்பு.. நெல்லை வலையில் 10 அடி பாம்பு.. எப்படி ஒரே நாளில்?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து மலைப்பாம்புகள் சிக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஊருக்குள் புகுந்த இந்த ராட்சதப் பாம்புகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலான செயலால் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது பூவங்காபறம்பு என்ற பகுதி.. இங்குள்ள திருவிதாங்கோடு கிளைக் கால்வாயில், 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் நேற்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.

Kanyakumari Nellai Python Snake Rescue Snake News

கன்னியாகுமரி மலைப்பாம்பு

அந்த வழியாக வந்த ஜெரோம் என்ற இளைஞர் இதை பார்த்து விட்டார்.. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தர முயன்றார்.. ஆனாலும் வனத்துறையினர் வந்து சேருவதற்குள் அந்தப் பாம்பு எங்காவது தப்பிச் சென்றுவிட்டால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அவர் யோசித்தார்.

அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கொஞ்சமும் தாமதிக்காமல் திடீரென அந்த கால்வாய்க்குள் துணிச்சலுடன் இறங்கினார்... தண்ணீரில் கிடந்த அந்த மலைப்பாம்பை அந்த இளைஞரே லாவகமாகப் பிடித்துக் கரைக்கு இழுத்து வந்தார். இதை தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களோ பதறிப்போய் அருகில் ஓடிவந்தனர்.. பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து அந்தப் பாம்பைச் சாக்குப்பையில் பத்திரமாக அடைத்து கட்டினர்.

சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு உடனடியாகத் கொண்டு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சில மணி நேரங்களுக்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நம்பியாற்றில் 10 அடி நீள மலைப்பாம்பு

இதேபோல, நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே பாயும் நம்பியாற்றிலும் ஒரு பரபரப்பு நடந்துவிட்டது.. வழக்கம்போல மக்கள் அங்கு மீன்பிடிப்பதற்காக தண்ணீரில் வலைகளை வீசி விரித்து வைத்திருந்தனர். அந்த வலைகளை இழுத்து பார்த்தால், அதில் கனமான மீன் சிக்கியது போல தெரிந்தது.. உடனே அந்த வலையை உற்றுப்பார்த்தபோதுதான், அது மீன் இல்லை, மலைப்பாம்பு என்று தெரியவந்தது.

சுமார் 10 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று அந்த வலையில் சிக்கி அசைய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே பதறிப்போன அவர்கள், "கிரீன் கேர்" அமைப்பின் தன்னார்வலர்களுக்க தகவல் தந்தனர்.. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வந்த அவர்கள், மீட்புப் பணிகளைத் தொடங்கினார்கள்.

ஒரே நாளில் 2 பாம்புகள்

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, அந்தப் பாம்புக்கு எந்த ஒரு சிறு காயமும் படாமல் மிகப் பத்திரமாக அந்த வலையிலிருந்து விடுவித்து மீட்டனர். மீட்கப்பட்ட அந்தப் பெரிய மலைப்பாம்பு திருக்குறுங்குடி வனச்சரக அலுவலகத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, வன அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரில் இதுபோன்று பாம்புகள் அடித்து வரப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், நம்பியாற்று மீன்பிடி வலையில் இவ்வளவு பெரிய பாம்பு சிக்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி விட்டது.

குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் மலைப்பாம்புகள் சிக்கிய இந்தச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+