கன்னியாகுமரியில் கனமழையால் நிலச்சரிவு...இன்று ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையங்கள், தண்டவாளத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி வழியாக வந்துசெல்லும் விரைவு ரயில்கள் மழை பாதிப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்டு, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வண்டி எண் 12634 கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 16127 எழும்பூர்-குருவாயூர் 16127 இடையே இயக்கப்படும் ரயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்: 06426 நாகர்கோவில்-திருவனந்தபுரம் வண்டி எண் 06427 திருவனந்தபுரம் -நாகர்கோவில் கொல்லம்-திருவனந்தபுரம் வண்டி எண் 06425 திருவனந்தபுரம்-கொல்லம் வண்டி எண் 06435 இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 16525 கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் கன்னியாகுமரி-கொல்லம் இடையிலும், வண்டி எண் 06366 நாகர்கோவில்-கோட்டயம் ரயில் நாகர்கோவில்-கொல்லம் இடையிலும், வண்டி எண் 16724 கொல்லம்-எழும்பூர் ரயில் கொல்லம்-நாகர்கோவில் இடையிலும், வண்டி எண் 06650 நாகர்கோவில்-மங்களூரு 06606 நாகர்கோவில்-மங்களூரு ரயில்கள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 06649 மங்களூரு-நாகர்கோவில் வண்டி எண் 06605 மங்களூரு-நாகர்கோவில் ரயில்கள் வண்டி எண் 02627 திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையிலும், திருச்சி-திருவனந்தபுரம் ரயில் நெல்லை-திருவனந்தபுரம் இடையிலும், திருவனந்தபுரம்-திருச்சி ரயில் திருவனந்தபுரம்-நெல்லை இடையிலும், கன்னியாகுமரி-ஹசரத் நிசாமுதீன் ரயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications