பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.. அமைச்சர் மனோ தங்கராஜ் சுளீர்!
கன்னியாகுமரி : குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த கட்சியினருக்கு, பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சைதை சாதிக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சைதை சாதிக் பேசிய மேடையில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜ், சைதை சாதிக் பேச்சை ஊக்குவிக்கும் வகையில் கைதட்டியது பற்றி நடிகை குஷ்பு கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

சைதை சாதிக்
திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக், திமுக மேடையில் பாஜகவைச் சேர்ந்த சினிமா நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். குஷ்புவின் ட்வீட்டுக்கு பதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இதனை சகித்துக்கொள்ள முடியாதது. இதற்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கிறேன். எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை" எனத் தெரிவித்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
இந்த விவகாரம் விவாதமானதைத் தொடர்ந்து, தன் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தான் பேசியது வருத்தம் அளித்திருந்தால் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் சைதை சாதிக். மேலும், பாஜக மகளிர் அணியினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளரை கண்டித்தும், அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னையில் பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்நிலையில், நடிகை குஷ்பு, சைதை சாதிக்கின் தரம் அவ்வளவு தான் என்றாலும், அவரது பேச்சை மேடையில் இருந்து, ரசித்து கைதட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ் இதுவரை வருந்தியதாக தெரியவில்லை. தன் தரக்குறைவான பேச்சுக்காக சாதிக், என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூட எதிர்பார்க்கவில்லை. அவரை விட அதிகம் குற்றம் இழைத்தவர் அமைச்சர் மனோ தங்கராஜ் தான். அவர் மன்னிப்பு கேட்கும் வரை, இந்தப் பிரச்னையை நானோ பாஜகவோ விடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசியுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை என விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பாஜகவுக்கு தகுதி இல்லை
அப்போது பேசிய அவர், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பாஜக கட்சியினருக்கு, பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள் யாரின் கைப்பாவைகள்?
மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்கிறார்களா? என்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். மாநில ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications